Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Sunday, 6 September 2020

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய வெற்றி அணி!

நமக்கு நாமே குழுவின் சார்பாக அரசு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தயாரிப்பாளர் எஸ் விஜயசேகரன் அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்த நிர்வாகிகள் சரியாக செயல்படாத காரணத்தினால் அனைத்து தயாரிப்பாளர்களும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாக இனி வரும் தேர்தலில் இதுவரை பதவி வகித்தவர்கள் மீண்டும் பதவிக்கு வராமல் தடுக்க புதியவர்கள் தலைமேயேற்று நல்ல நிர்வாகம் அமைய கலந்துரையாடப்பட்டது.




இந்த சிறப்பு கூட்டத்தில் விஜயசேகரன், எஸ்டி சுரேஷ்குமார், ராமச்சந்திரன் தயாளன், தங்கம் சேகர், திருப்பூர் செல்வராஜ், திருநெல்வேலி ஜெயக்குமார், அமல்ராஜ், தன சண்முக மணி, வெங்கடேஷ் துருவா  மற்றும் பல  தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். கூடிய விரைவில் அனைத்து தயாரிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசித்த பிறகு முக்கிய முடிவுகள்  அறிவிக்கப்படும் என்று புதிய அணியினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment