Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Thursday, 17 September 2020

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7 “  திரைப்படம் 2020 ட்ரோண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில்,  மூன்று விருதுகளை வென்றுள்ளது !

இயக்குநர் ராதகிருஷணன் பார்த்திபன் அவர்களை தேடி, வாழ்த்து மழை, தொடர்ந்து குவிந்து வருகிறது. ஆஸ்கர் அகாடமி விருது குழுவின் விமர்சகர்கள் முதல், தியேட்டரில் படம் பார்த்த அடிமட்ட ரசிகர்கர்கள் வரை அனைவரும் பாராட்டிய “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படம்,  தமிழ் சினிமாவில் ஒரு பெரும் புரட்சியை, புதிய அலையை ஏற்படுத்தியது. தற்போது இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் பரீட்சார்த்தமான முயற்சியான “ஒத்த செருப்பு சைஸ் 7 “ 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில்  மூன்று  விருதுகளை வென்றுள்ளது. ஜீரி விருதான  சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த தனி சோலோ நடிப்பு என மூன்று விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.

நடிகர் , இயக்குநர்  ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து கூறியதாவது...

மனதை தாலட்டும் மற்றுமொரு பாராட்டு. “ஒத்த செருப்பு சைஸ் 7 “ 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில்  மூன்று  விருதுகளை வென்றுள்ளது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை. இப்படத்திற்கான எங்களது கடின உழைப்பை, அவர்கள் புரிந்துகொண்ட விதமும், படத்தை மதித்து, அங்கீகரித்த விதமும் எங்கள் குழுவுக்கு பெரும் வியப்பை தந்தது.  மூன்று விருதுகளை எங்கள் படம் வென்றது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இம்மாதிரியான பாரட்டுக்கள் தான் மேலும் மேலும் புதிய முயற்சிகளை செய்ய,  எனக்கு பெரும் ஊக்கம் தந்து வருகிறது. ட்ரோண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழா, ஜீரி உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன். மேலும் தமிழ்திரைத்துறையில் உள்ள எனது நண்பர்கள், பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் படத்தினை பற்றி நல்ல விதமான கருத்துக்களை தொடர்ந்து பரப்பிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படம்  கடந்த வருடம் பல இன்னல்களுக்கு நடுவே, நான் போட்ட விதை. அது இந்த வருடம் பூர்வ ஜென்ம புண்ணியம் போல் பாராட்டுக்களை கொண்டு வந்து சேர்த்துகொண்டே இருக்கிறது. இவ்வருடம் எனது அடுத்த மாபெரும் முயற்சியாக “இரவின் நிழல்” திரைப்படத்தை தொடங்கியுள்ளேன் இதற்கான பெருமையும், பாரட்டுக்களும் அடுத்த வருடம் கிடைக்குமென ஆவலுடன் காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment