Featured post

ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE

 ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE* Rocking Star...

Friday, 13 November 2020

தயாரிப்பாளர் மற்றும் படைப்பாளி

 தயாரிப்பாளர் மற்றும் படைப்பாளி வெற்றிமாறன் வழங்கும் “காவல்துறை உங்கள் நண்பன்” !



Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்தின் விநியோக உரிமையை  வாங்கியது படத்திற்கு தனி முத்திரையை பெற்று தந்த நிலையில், தற்போது  மேலும் ஒரு அட்டகாச பரிசாக தேசிய விருது பெற்ற படைப்பாளி மற்றும் தயாரிப்பாளர் வெற்றிமாறன் தனது Grassroot film company மூலம் இப்படத்தை வழங்கவுள்ளார். 





Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இதுகுறித்து கூறியதாவது... 


தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையாக அனைவராலும் போற்றப்படும் வெற்றிமாறன் போன்ற படைப்பாளி இப்படத்தின் மீது கவனம் கொள்வது இப்படத்திற்கு கிடைத்திருக்கும் பெரும் ஆசிர்வாதம் ஆகும். நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்கள் மீது வெற்றிமாறன் எப்போதும் பெரும் காதல்  கொண்டுள்ளார். அவ்வகையிலான படங்களுடன் எந்த வகையிலாவது தன்னை இணைத்துகொள்வதில் அவர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளார். “காவல்துறை உங்கள் நண்பன்” படம் சொல்லப்பட்டிருந்த விதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை பார்த்ததும் பெரும் மகிழ்ச்சியுடன்  அனைவரையும் பாராட்டினார். தனது Grassroot film company மூலம் இப்படத்தை வழங்குவதில் பெரும் உற்சாகமாக உள்ளார். அவர் இப்படத்தில் பங்குபெற்றிருப்பது  படத்தின் மீதான கவனத்தையும் எதிர்பார்ப்பையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. 


 “காவல்துறை உங்கள் நண்பன்” படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ரவி மையப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மைம் கோபி, சரத் ரவி, RJ முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். 

ஆதித்யா, சூர்யா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை இயக்கம் செய்ய ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார். வசனத்துடன் பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகர்வேல். 



இயக்குநர் RDM இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தினை

பாஸ்கரன், ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்கள். வெற்றிமானின்  Grassroot film company உடன் இணைந்து  Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை 2020 டிசம்பர் மாதம் தமிழகமெங்கும்  வெளியிடுகிறார்.

No comments:

Post a Comment