Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Friday, 5 February 2021

வித்தியாசமான காதல் கதையாக

 வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ளது  


       தினேஷ் – தீப்தி சதி நடித்துள்ள “ நானும் சிங்கிள் தான் “


“புன்னகை பூ கீதா” மலேசியாவில் பண்பலை, தொலைக்காட்சி, சினிமா எனப் பலத் துறைகளில் பிரபலமானவர். இவர் அறிந்தும் அறியாலும், பட்டியல் படங்களை தயாரித்துள்ளார். தற்போது Three Is A Company Production சார்பில் அவர் தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “


கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். நாயகியாக  தீப்தி சதி நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, கதிர், செல்வா  ஆகியோர் நடித்துள்ளனர்.









ஒளிப்பதிவு  - K.ஆனந்தராஜ்


இசைப்புயல் A.R.ரகுமானிடம் உதவியாளாராக இருந்த ஹித்தேஷ் மஞ்சுநாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


பாடல்கள்  - கபிலன் வைரமுத்து


எடிட்டிங் – ஆண்டனி


ஸ்டண்ட் -   கனல்கண்ணன், ஆடம் ரிச்சட்ஸ்


கலை இயக்குனர் – ஆண்டனி


நடனம்  - சின்னி பிரகாஷ், ரேகா சின்னி பிரகாஷ், அபிப்.RK


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – r.கோபி


படம் பற்றி இயக்குனர் r.கோபி கூறியதாவது..


“ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கைகூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்த படம். இவர்களுக்கு எப்படி மொட்ட ராஜேந்திரன் “குப்பிடாக” மாறி காதலுக்கு உதவுகிறார், ஹீரோ தன் புத்திசாலித்தனத்தால் காதலில் வெற்றி கொள்கிறாரா? பிடிவாதமாக இருக்கும் ஹீரோயின்  மனதை மாற்றுகிறாரா? இல்லை இவர் மனம் மாறுகிறாரா என்பது தான் கதை. என்ன தான் நாங்கள் முழுக் கதையையும் கூறினாலும் இது ஒரு கதைதான் இதுவரை சொல்லாத இன்னொரு கதையும் படத்தில் இருக்கிறது அது படம் பார்த்தால் தான் தெரியும் என மிகுந்த நம்பிக்கையுடன் இயக்குனர் ரா.கோபி தெரிவித்தார்.  கதைக்கான காட்சிகள் வித்தியாசமாகவும், இளமையாகவும் படமாக்கப்பட்டுள்ளது.  டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் வாழ்வில் எடுக்கும் சில சிக்கலான  முடிவுகளையும், ஃபெமினிசம் தொடர்பான சில விஷயங்களையும் இப்படம் பேசியுள்ளது.   குறிப்பாக இன்று பெண்களுக்கு நடக்கும்  பாலியல் கொடுமைகளைப் மையப்படுத்தி  சில காட்சிகளும் இப்படத்தில் காரசாரமாக வைத்துள்ளனர். வலிமையான ஹீரோயின் கதாப்பாத்திரம் ஒரு பாலியல் குற்றத்தை எப்படி சாமர்த்தியமாக கையாள்கிறார் என்பது  பெண்கள் எவ்வாரு துணிந்து நின்று செயல்பட வேண்டும் என்பதை பறைசாற்றும் விதமாக இருக்கும்   என்கிறார்கள். 


படம் இம்மாதம் 12 ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

No comments:

Post a Comment