Featured post

Daddy’s Home!’ Yash Roars In & as Raya in a Bold Toxic Birthday Reveal*

Daddy’s Home!’ Yash Roars In & as Raya in a Bold Toxic Birthday Reveal* Yash Is Raya. Period. ‘Daddy’s Home’ Echoes Through a Savage Tox...

Monday, 15 February 2021

சாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்திற்கு

 சாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகிறார்


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பில் உள்ள வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வரும் மார்ச் 4 ஆம் தேதி வருகிறார்.


சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் ஆலயம் உலக பிரசித்திப் பெற்றதாகும். இக்கோவிலில் தரிசனம் செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.


இந்த நிலையில், வரும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும் அய்யா வைகுண்டரின் 189 வது அவதார திருநாளை முன்னிட்டு, பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், மனோஜ் பாண்டியன் எம்.பி, இயக்குநரும் தயாரிப்பாளரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சாமித்தோப்பில் வைகுண்டர் தரிசனம் பெற வருகிறார்.



2008 ஆம் ஆண்டு அய்யா வைகுண்டரின் வரலாறு மற்றும் அதிசயங்களை உலகிற்கு எடுத்துறைக்கும் வகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு ‘அய்யா வழி’ என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்த நாஞ்சில் பி.சி.அன்பழகன், 2010 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை வைகுண்டர் ஆலயத்திற்கு அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment