Featured post

ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் “ஐயோ காதலே” முதல் சிங்கிள் பாடல்!!

 *ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் “ஐயோ காதலே”  முதல் சிங்கிள் பாடல்!!* Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்...

Monday, 3 May 2021

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின்

 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சர்வதேச ஆர்.எஸ்.ஜீ சமூக சேவை மையம் சார்பில் வாழ்த்துக்கள் நிறுவனர்,தலைவர் கோபி காந்தி தகவல்.

      மே:௦௨, சர்வதேச ஆர்.எஸ்.ஜீ சமூக சேவை மைய நிறுவனர் தலைவர் நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. 
 
 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களின் மூலம் தொடரப்படும் ஆட்சி ஏழை எளிய மக்களுக்கானதாகவும்,அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் குறைந்தும்,எளிமையான அரசாக செயல்படவும், மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களுக்கான அரசாக, இந்தியாவில் தமிழகம் முன்மாதிரியாக திகழவும் அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவும்,அரசாங்கத்தின் மூலமாக சிறப்பான கல்வி,மருத்துவம்,நுகர்வோர் உணவு பொருட்களை தரமானதாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கவும்,மக்களுக்கு அவரவர் வார்டுகளில் அவரவர் குறைகள் தீர்க்கப்பட வேண்டும்,அரசு அலுவலகங்களில் அனைத்து பணிகளும் உடனடியாக நடைபெற வேண்டும்,என்று கேட்டு கொண்டு தனது வாழ்த்துக்களை   ஸ்டாலின்க்கு  தெரிவித்துள்ளார் சர்வதேச ஆர்.எஸ்.ஜீ சமூக சேவை மைய நிறுவனர் தலைவர் நடிகர் கோபி காந்தி.


No comments:

Post a Comment