Featured post

இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு

 இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு. 'கன்கஜூரா' டிரெய்லர் கடந்த காலத்தின் மறக்கமுடியாத ஒரு பயணத்தை நமக்கு உறுதி அளிக்கிறது"....

Monday, 10 May 2021

குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு

 குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு

குமுதம் நிறுவனர் மற்றும் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களின் மனைவியும் குமுதம் இயக்குநர்களில் ஒருவருமாக இருந்த திருமதி.கோதை அண்ணாமலை இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 92. கடந்த ஒரு வாரமாய் மருத்துவமனையில்
சிகிச்சையில் இருந்தார்

1947-ம் வருடம் அவரது கணவர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை ஆசிரியராக இருந்து
நிறுவிய குமுதம் இதழின் வளர்ச்சிக்கு ஆரம்பக் காலங்களிலிருந்து இறுதிவரை உறுதுணையாக இருந்தவர். எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.



1994-ல் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் டாக்டர்
எஸ்.ஏ.பி.ஜவஹர் பழனியப்பன் குமுதம் இதழுக்கு பொறுப்பேற்றார். அவருக்கும் குமுதம் ஆசிரியர் குழுவுக்கும் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தவர் திருமதி. கோதை ஆச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமதி கோதை ஆச்சிக்கு ஒரு மகன். இரண்டு மகள்கள்.

கோதை ஆச்சியின் மகன் டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் பிரபலமான இதய நோய் சிகிச்சை மருத்துவராக இருக்கிறார். தந்தையின் கனவுகள் மெய்ப்பட குமுதம் பணிகளையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்,

மகள் விஜயலட்சுமி அழகப்பன் மைசூரில் வசிக்கிறார்.

மற்றொரு மகள் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கிருஷ்ணா சிதம்பரம்
சென்னையில் வசிக்கிறார்.

- எஸ்.ஏ.பி. அண்ணாமலை குடும்பத்தினர்


No comments:

Post a Comment