Featured post

Fire Movie Review

Fire Movie Review ஹாய் மக்களே இன்னைக்கு நம்ம  ஃபயர் படத்தோட ரிவ்யூ பாக்க போறோம். இந்த படத்தை  ஜே எஸ் கே சதீஷ்குமார் இயக்கி இருக்காரு. பெப்ரவ...

Friday, 7 May 2021

Choosing the "RIGHT" Test is Critical to Understand the Immune Response to SARS Cov-2 and COVID-19 Vaccination

ராஷ் டயக்னோஸ்டிக்ஸ் (Roche Diagnostics)இந்தியா, இந்த ஆண்டு ஜனவரி மாதம், கொரோனா  வைரஸ் - கோவிட்-19 (SARS-CoV-2) க்கு எதிரான ஆன்டிபாடி அளவை அளவிடுவதற்கான அளவுசார் சோதனை (எலெக்சிஸ் ஆன்டி-SARS-CoV-2S) (Quantitative Test) ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த சோதனை இப்போது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ராஷ்ஷின் ஆன்டி SARS CoV-2 S (Elecsys Anti SARS CoV-2 S) சோதனை ஆன்டிபாடிகளை அளவிடுகிறது, இது கடந்தகாலங்களில் ஏற்பட்ட இயற்கை தொற்றுகளைக் கண்டறிய அல்லது தடுப்பூசி மூலம் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டறிய உதவும்.

ராஷ்ஷின் ஆன்டி SARS CoV-2 S (Elecsys Anti SARS CoV-2 S) சோதனை, மனித உடலில் இருந்து எடுக்கப்படும் இரத்த மாதிரிகளில் கொரோனா வைரஸின் ஸ்பைக் (எஸ்) புரதத்தின் (spike (S) protein) உருவ அமைப்பில் RBD என்ற ஏற்பு-இணைப்பு களத்திற்கு எதிராக, பாதிப்பிற்குள்ளாகியுள்ள நபர்களின் உடலில் தூண்டப்பட்ட ஆன்டிபாடிகளைத் துல்லியமாக அளவிடுகிறது. இந்த வகை ஆன்டிபாடிகள், வைரஸ் மனித செல்களில் நுழைவதைத் தடுப்பதன் வழியாக, தனிநபர்களைப் பாதுகாக்கிறது. பெரும்பாலான கோவிட்-19 தடுப்பூசிகள் ஸ்பைக் புரதம் அல்லது அதன் ஏதேனும் ஒரு அம்சத்தைக் கொண்டிருக்கும் மற்றும் அதனால் ஆன்டிபாடிகள் மற்றும் நோய்தடுப்பு செல்கள் அதற்கு எதிராக ஒரு நோயெதிர்ப்பு விளைவை உண்டாக்கும்.

ராஷ்ஷின் ஆன்டி SARS CoV-2 S (Elecsys Anti SARS CoV-2 S) சோதனையில், தடுப்பூசிகளால் ஏற்படுத்தப்பட்ட நோயெதிர்ப்பு விளைவை, ஸ்பைக் புரதத்திற்கு எதிராக உருவாகியுள்ள ஆன்டிபாடிகளை அளவிடுவதன் வழியாக அளவுசார் சோதனை மேற்கொண்டு ஆய்வகங்களில் கண்டறியலாம். ஆன்டிபாடிகளின் நடுநிலைப்படுத்தல் செயல்பாடு சாத்தியமுள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கான மிக நெருக்கமான இணைப்பாகத் திகழ்வதால், தடுப்பூசியின் விளைவைக் கண்டறிய இது மிகவும் முக்கியமனதாகத் திகழ்கிறது. ராஷ்ஷின் ஆன்டி SARS CoV-2 S (Elecsys Anti SARS CoV-2 S) அத்தகைய நடுநிலைப்படுத்தல் செயல்பாட்டைக் கண்டறியும் செயல்திறனைக் கொண்டுள்ளதால் இதற்கு மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கிறது

தடுப்பூசி அல்லது \ இயற்கை தொற்றுக்குப் பிறகு உடலில் உருவான ஆன்டிபாடிகளின் அளவு அல்லது செறிவை அளவுசார் சோதனை தெரிவிக்கும். அதே நேரத்தில், தரம்சார் ஆன்டிபாடி சோதனையின்  முடிவுகள் எண்களில் கிடைத்தாலும் அது ‘பாதிப்புள்ளது’ அல்லது ‘பாதிப்பில்லை’ என்பதை மட்டுமே தெரிவிக்கும். எனவே, தரம்சார் சோதனை அன்டிபாடிகள் “உள்ளதா” என்பதையும், அளவுசார் சோதனை “எவ்வளவு” உள்ளது என்பதையும் தீர்மானிக்கின்றன. எனவே, ஆன்டிபாடி சோதனையைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டினைப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

அளவுசார் ஆன்டிபாடி சோதனைகள் தன்னிச்சையான அலகுகளுக்கு மாற்றாக அல்லது ஒரு குறியீடாக இல்லாமல், உலகளாவிய ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைபடுத்தப்பட்ட அலகுகளில் செறிவு குறித்து தெரிவிக்க வேண்டும். இது சோதனை முடிவுகளின் எளிமையான மற்றும் சீரான விளக்கத்தை சாத்தியமாக்கும். எலெக்சிஸ் ஆன்டி-SARS-CoV-2 S (Elecsys Anti-SARS-CoV-2 S) மதிப்பீட்டின் அலகுகள் ஒரு சிறந்த தொடர்பைக் கொண்டுள்ளன, மேலும் இது உலகச் சுகாதார நிறுவனமான (WHO) சர்வதேச அலகுகள் தரநிலைக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது.

SARS CoV-2 இன் புதிய வகைகள் வெளிப்பட்டு வரும் நிலையில், அவற்றின் நடத்தை மற்றும் தாக்கம் குறித்து கவலை அதிகரித்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்டிபாடி சோதனையானது மாறுபட்ட வைரஸுக்கு எதிராக உருவாகும் ஆன்டிபாடிகளைக் கண்டறிய வேண்டியது அவசியமாவதால், கடந்த கால SARS CoV-2 தொற்றையும் குறிக்கிறது.

ராஷ் டயக்னாஸ்டிக்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு.நரேந்திர வர்தே அவர்கள், “இந்தியாவில் கோவிட் தடுப்பூசி பயன்பாடு தொடங்கியுள்ள நிலையில், எலெக்சிஸ் எதிர்ப்பு SARS CoV-2 S (Elecsys Anti-SARS CoV-2 S) பரிசோதனைசரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பரிசோதனை அதன் சிறந்த துல்லியம், நடுநிலைப்படுத்தல் மதிப்பீடுகள் மற்றும் நிலைபடுத்தப்பட்ட சோதனை முடிவுகளுடன்,  SARS CoV-2 இன் பாதிப்பை மதிப்பிடுவதோடு மட்டுமல்லாமல், தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு விளைவை வகைப்படுத்துவதற்கும் பொருத்தமானதாகத் திகழ்கிறது. இந்த அறிமுகத்தின் மூலம், நாட்டிற்கு புதுமையான, உயர் மருத்துவ மதிப்பு கொண்ட புதிய பரிசோதனைகளை வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் தொடர்ந்து ஈடேற்றி வருகிறோம்” என்று கூறினார்.

மெட்ஆல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அர்ஜுன் அனந்த் அவர்கள், “ஒரு அளவுசார் சோதனை தடுப்பூசிக்குப் பிந்தைய நோயெதிர்ப்பு விளைவின் வளர்ச்சியைப் பற்றிய உணர்வை தனிநபர்களுக்குத் தருகிறது. இதை குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்ய வேண்டும் என்பதே எனது பரிந்துரையாகும். ஊசி போடப்படுவதற்கு முன்பு ஒரு முறையும், இரண்டாவது ஊசி போடப்பட்டு 2-3 வாரங்கள் கழித்து இரண்டாவது முறையும், மேலும் 6 மாதங்களுக்குப் பிறகு ஆன்டிபாடிகளின் அளவைப் பொறுத்து ஒருவர் நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள மூன்றாவது முறையும் மேற்கொள்ளப்படலாம். இந்த வைரஸ் குறித்து இன்னும் முழுமையாக அறியமுடியாத நிலையில் இது பொருத்தமான நடைமுறையாக இருக்கும்” என்று கூறினார்.

ஹைடெக் டயக்னாஸ்டிக்ஸின் நிர்வாக இயக்குனர் டாக்டர் S.P. கணேசன் அவர்கள், “SARS COV-2 வைரஸ் மனித செல்லுடன் அதன் S புரதத்தை இணைப்பதன் மூலம் லேசானது முதல் கடுமையான COVID நோய்தொற்றை ஏற்படுத்துகிறது. எனவே, COVID க்கான பெரும்பாலான தடுப்பூசிகள் S புரதத்திற்கு நோயெதிர்ப்பு சக்தியை வழங்குவதற்காக ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்பு செல்களை உற்பத்தி செய்யும் வகையில் உருவாக்கப்படுகின்றன. தடுப்பூசிக்குப் பிறகு, S-புரதத்தின் ஆன்டிபாடிகளை குறிப்பாக அளவிடுவது, ஒரு நபருக்கு நோயெதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்பதை அறிய மிகவும் ஏற்றதாக இருக்கும். பிற COVID ஆன்டிபாடிகளை அளவிடுவது பயனுள்ளதாக இருக்காது. ராஷ் SARS CoV-2 ஆன்டிபாடி S-புரதத்திற்கான ஆன்டிபாடியை குறிப்பாக மற்றும் அளவுசார் முறையிலும் அளவிடுகிறது. தடுப்பூசிக்கு பிந்தைய நோயெதிர்ப்பு விளைவை மதிப்பிடுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். பிற ஆன்டிபாடிகளுக்கு சோதனை செய்வது எதிர்மறையான முடிவுகளைத் தரலாம் மற்றும் அது இது தடுப்பூசி வேலை செய்யவில்லை எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்” என்று கூறினார்


No comments:

Post a Comment