Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Thursday, 3 June 2021

சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் 500


*சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் 500 முன்களப் பணியாளர்களுக்கு ஜியோ இந்தியா அறக்கட்டளை வழங்கிய மதிய மற்றும் இரவு உணவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
 
திருமதி. பிரியா ஜெமிமா நிறுவிய ஜியோ இந்தியா அறக்கட்டளையானது சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு கொரோனா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் 500 பேருக்கு அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான மதிய மற்றும் இரவு உணவை நன்கொடையாக அளித்துள்ளது. 

ஜியோ இந்தியா அறக்கட்டளையின் இந்த சீறிய முயற்சியை *தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஜியோ இந்தியா அறக்கட்டளையின் நிறுவனரும், அறங்காவலருமாகிய திருமதி. பிரியா ஜெமிமா மற்றும் அறங்காவலர்கள் ஜார்ஜ், டி.என்.சந்தோஷ்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

























கடந்த மாதம் 2ஆம் தேதி முதல் நேற்று ஜூன் 2ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில், ஜியோ இந்தியா அறக்கட்டளை சென்னையைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு உணவுகளை விநியோகித்து வருகிறது. தாம்பரம் மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு காலை மற்றும் மதிய உணவுகளை இலவசமாக வழங்கி வருவதோடு, செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு உணவுகளுடன், மளிகை பொருட்களையும் விநியோகித்து வருகிறது. மேலும், திருவண்ணாமலை, சிதம்பரம் , திருச்சி அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் கோடம்பாக்கம் மருத்துவமனை ஆகியவற்றிற்கு மொத்தம் 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ள ஜியோ இந்திய அறக்கட்டளை, வீட்டில் சிகிச்சை பெற்று வரும் 4 நோயாளிகளுக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment