Featured post

Otha Vottu Muthaiya Movie Review

                                        Otha Vottu Muthaiya Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஒத்த ஒட்டு muthaiah ன்ற படத்தோட review ...

Wednesday, 2 June 2021

தயாரிப்பாளர் & நடிகர்..மாஸ் என்ட்ரி

 *தயாரிப்பாளர் & நடிகர்..மாஸ் என்ட்ரி கொடுக்கும் கணேஷ் தேசிங்*


நம் தமிழ்சினிமா பல்வேறு ஆளுமைகளை கண்டுள்ளது. அழகு பணம் போன்ற விசயங்களைத் தாண்டி சரியான திறமைகளோடு வருபவர்களை சரியான நேரத்தில் உச்சத்தில் வைத்து அழகு பார்த்திக்கிறது நமது தமிழ்சினிமா. எங்கிருந்து யார் எப்படியான அதிர்வை ஏற்படுத்திச் செல்வார்கள் என்பதை கணிக்கவே முடியாது..அந்த வகையில் நேர்த்தியான பார்வையோடு தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்கிறார் கணேஷ் தேசிங்..பெயரில் எதோ வடநாடு சாயல் இருப்பது போல் தெரியும் கணேஷ் தேசிங் நமது விருதுநகர் காரர். பார்ப்பதற்கு தேர்ந்த கதாநாயகன் லுக்கில் இருக்கும் இவர் சினிமாவில் வைத்திருக்கும் முதல் படி நடிகராக அல்ல...தயாரிப்பாளராக..யெஸ் மிகச்சிறப்பான கதையம்சங்களை தன்னகத்தே கொண்ட மலையாள சினிமாவில் பீஸ் என்ற படத்தில் இணை தயாரிப்பாளராக பங்கெடுத்துள்ளார் கணேஷ் தேசிங்..இப்படத்தில் மலையாள சினிமாவின் முக்கிய முகம்  ஜோதி ஜார்ஜ். நடித்துள்ளார். நடிப்பில் பல்வேறு விருதுகளை வென்ற பெருமைக்குரிய ஜோதிஜார்ஜ் நடிக்கும் படத்தை ஷன்பீர் இயக்கி இருக்கிறார்...

 





சினிமாவிற்கு வந்ததிற்கான காரணம் குறித்தும் தனது கரியர் குறித்தும் கணேஷ் தேசிங் கூறியபோது, 


"சினிமா இண்டஸ்ட்ரி மட்டும் அல்ல...எந்தத் துறையாக இருந்தாலும் அதில் அந்தந்த படிப்பை கற்ற  நிபுணர்கள் தான் இருக்கணும்/ இருப்பார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான்  இன்ஜினீயர் முடித்திருக்கிறேன். ஆனால் கிரிப்டோ கரன்ஸி பற்றிய ட்ரேடிங்கில் இருக்கிறேன். 


Udhaya Pharama 

என்ற  பார்மஸ்ட்டிக்கல் கம்பெனியில் டைரக்டராக இருக்கிறேன்.   Bitrix global Corp என்று சொந்தமாக ஒரு  கம்பெனியும் நடத்தி வருகிறேன். க்ரிப்டோ கரன்ஸி என்ற விசயம் இப்போது பெரிய டாபிக்காக வலம் வருகிறது. அதைப்பற்றிய விவாதங்களும் விசாரணைகளும் அதிகம் வந்துள்ள நிலையில் நிறையபேர் அது சம்பந்தமாக தொடர்பு கொள்கிறார்கள்.  


 நான் சினிமாவிற்கு வந்தது ஆதாயத்திற்காக மட்டும் அல்ல..ஆத்ம திருப்திக்காகவும் தான். திரைக்கலை மூலமாக நிறைய நல்லவற்றை நாம் விதைத்துச் செல்ல முடியும். அதனால் தான் படத்தயாரிப்பு என்ற  முயற்சியில் இறங்கி இருக்கிறேன். நிறைய தகுதி வாய்ந்த படைப்பாளிகள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களுக்கான களம் அமைத்துக் கொடுக்கும் எண்ணமும் இருக்கிறது.  எப்போதுமே வேலை செய்வதை விட வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமுண்டு. அதனால் தான் இன்ஜினியர் படித்துவிட்டு ஐடி வேலைக்குச் செல்லாமல் வேலை கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறேன். சினிமாவில் திறமையானவர்களை அடையாளம் காட்டுவதன் மூலம் நிறையபேர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். மேலும் பணம் அதிகம் புழங்கும் சினிமாவில் பணம் சம்பந்தப்பட்ட அனுபவங்கள் நிறைய பெற்ற என்னால் சரியாக நிர்வாகம் செய்ய முடியுமென நம்புகிறேன். அந்த நம்பிக்கைக்கு உரம் போட்டு கரம் கொடுப்பது போல எங்களின் முதல்படமான பீஸ் வந்துள்ளது. ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை தமிழில் விஜய்சேதுபதியும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் ரக்‌ஷன் ஷெட்டியும் வெளியிட்டு வாழ்த்தினார்கள். மேலும் நடிகர் ஜெய் அவர்களும் போஸ்டரை வெளியிட்டு பாராட்டினார்.  எனக்கு நடிக்கும் ஆர்வம் முன்னமே இருந்தாலும் தற்போது தான் அதற்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறேன். மாடலிங் துறையில் அதிககாலம் பணியாற்றிய அனுபவமும் நடிப்பிற்கு பெரிதாக ஊக்கம் கொடுக்கிறது. அந்த ஊக்கம்  பிரகாசமான வாய்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்...நம்பிக்கை வெல்லட்டும்

No comments:

Post a Comment