Featured post

Draupathi 2 Movie Review

 Draupathi 2 Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம draupathi 2 படத்தோட review அ பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  mohan g...

Thursday, 3 June 2021

திமுக இளைஞர் அணி செயலாளரும்,

திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், Dr. Ajmal Dastagir, வர்ஷா அஸ்வினி மற்றும் விஷ்ணு பிரபு ஆகியோர்  200க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான இலவச மளிகைப் பொருட்களை வழங்கினர்.*


திமுக முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 98 ஆவது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அவ்வகையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாள் விழாவில், *200 ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது.* 



















இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான *உதயநிதி ஸ்டாலின்* அவர்கள் பயனாளர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில், Dr. Ajmal Dastagir, வர்ஷா அஸ்வினி மற்றும் விஷ்ணு பிரபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment