Featured post

Freedom” Starring Sasikumar and Lijomol Jose Set for Worldwide Release on July 10 !!

 “Freedom” Starring Sasikumar and Lijomol Jose Set for Worldwide Release on July 10 !! Directed by Sathyasiva, the film “Freedom,” featuring...

Monday, 14 June 2021

நடிகர் தனுஷ் தான் “ஜகமே தந்திரம்”

 நடிகர் தனுஷ் தான் “ஜகமே தந்திரம்” பாடல்களுக்கு மிகப்பெரும் உந்துதல் - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ! 

தனுஷ், சந்தோஷ் நாராயணன் இருவரும் சொர்க்கத்தில் நிச்சயக்கிப்பட்ட கூட்டணி போல், ஒவ்வொரு முறையும், ரசிகர்களை புதிய உலகிற்கு அழைத்து செல்லும், அற்புதமான இசையை தந்து வருகிறார்கள். கடந்த வருடங்களில் ஒவ்வொரு முறையும் தனுஷ் மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணி, இசையில் பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டியுள்ளனர். அவர்கள் கூட்டணியில் வெளியான இசை, படங்கள் வெளிவந்த பிறகும் ரசிகர்களின் மனதில் நிலைத்து தங்கும் இசையாக இருந்து வருகிறது. 



“ஜகமே தந்திரம்”  திரைப்படம் இந்த அற்புத கூட்டணியை மீண்டும் திரைக்கு அழைத்து வந்திருக்கிறது. தனது விருப்பமான நாயகன் தனுஷ் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் புகழ்ந்து வருகிறார். 


நடிகர் தனுஷ் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியதாவது...


நான் எப்போதும் அவரிடம் நீங்கள் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருத்தர் என கூறுவேன். அதிலும் மிகச்சிறந்தவர்களில் முதன்மையானவர் என்றே சொல்வேன். அவர்  ஒரே நேரத்தில் முற்றிலும் வித்தியாசமான படங்களை செய்கிறார்.  அவர் எழுதவும் செய்கிறார். ரௌடி பேபி போன்ற பாடல்களை படைக்கிறார். தற்போதைய காலகட்டத்தில், இன்றைய தலைமுறையினர் என்ன விரும்புகிறார்கள்  என்பது அவருக்கு அத்துபடியாக தெரிந்திருக்கிறது. இப்படத்தின் பாடல்களை அவருக்கு அனுப்புவேன். பல வெற்றிகளை தந்திருந்தாலும் இப்படத்திற்கு எது தேவையோ அதை சரியாக சொல்வார். இப்படத்தின் இசைக்கு  அவர் தான் வழிகாட்டி,  அதை அவர் கண்டிப்பாக மறுப்பார். ஆனாலும் அவர் தான் இப்படத்தின் இசைக்கு உந்துதல் என்றார். 

தனுஷ் மற்றும் சந்தோஷ் நாராயணன் அவர்களின் அற்புத இசை கூட்டணியை, வரும் ஜூன் 18 ஆம் நாள் Netflix தளத்தில் வெளியாகும் “ஜகமே தந்திரம்” படத்துடன்  இணைந்து கொண்டாடுங்கள். இப்படம் கதையாக மட்டுமல்லாமல், இசையிலும் ரசிர்களை ஆச்சர்யபடுத்தவுள்ளது.

No comments:

Post a Comment