Featured post

பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்

 *பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தா...

Thursday 6 October 2022

விருமன்' ஹிட்.. 'பொன்னியின் செல்வன்' ஹிட்..

 'விருமன்' ஹிட்.. 'பொன்னியின் செல்வன்' ஹிட்.. 

அடுத்து, வரும் தீபாவளிக்கு வெளியாகும் படம் "சர்தார்". கார்த்தியின் தொடர் ஹிட்டை தொடர்ந்து வரும் சர்தார் படத்துக்கு  கடும் உழைப்பை கொட்டி.. பிரமாண்ட சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் குழுவினர். 


#இரும்புதிரை, #ஹீரோ வித்தியாசமான கதை களங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார், டைரக்டர் பி.எஸ்.மித்ரன் . 


சர்தார் என்றால் பெர்சிய மொழியில் படைத்தலைவன்'னு பொருள்.

'சர்தார்' ஒரு ஸ்பை த்ரில்லர் கதை. உளவாளி என்பது  நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடக்கிறதுதான். ஆனால் நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்து கூட அதை ஆரம்பிக்கலாம். ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப்பெரிய இடம் நோக்கி இன்டர்நேஷனல் வரைக்கும் உளவு போகுது. இதில் உலக அரசியலும் இருக்குது. இது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய கதை இது. 


பாரதியார் கவிதை போல... 

'நீ என்பது யார்? உடலா, உயிரா, செயலா'..

நம்ம அடையாளம் , செய்கிற செயல்தான். உளவாளிகளும் அப்படித்தான்.  அலெக்ஸாண்டர், ஹிட்லர் உட் பட பெரும்பாலானோர் வரலாற்றின் முக்கியமான சாதனைகளுக்கு பின்னாடி முக்கிய காரணமாக இருப்பது உளவாளிகள் தான்.  


கார்த்தி, 'சிறுத்தை'யில் ரத்னவேல் பாண்டியனாக விரைப்பும், ஜாலியாக இரண்டிலும் வந்தார். இதில் ஜாலியான போலீஸ்காரன் . அலப்பறையா இருக்கும். 

வயதான அப்பாவாக கார்த்தி  கன கச்சிதம். இளமை, வயதானவர் இருவருக்கும் பெரிய அளவில்  வித்தியாசம் இருக்கும். 

மூணு மணி மேக்கப்.. அந்த மேக்கப் போட்டு டயலாக் பேசி நடிக்கவே கஷ்டம். இதில் கூடவே ஆக்ஷன் வேறு இருக்கும். அது ரொம்பவே கஷ்டம். இப்படி மெனக்கிட்டு கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி. 


ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன்னு 

''இரண்டு பேருக்கும் முக்கிய கதாபாத்திரம். மற்றொரு முக்கிய கேரக்டரில் 

லைலா நடிச்சிருக்காங்க. 


கார்த்தியின் படங்களிலேயே பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் எஸ்.லட்சுமண்குமார். வரும் தீபாவளி இப்படம் வெளியீடு. 


*Prince pictures #SARDAR 

Artist list*


Karthi 

Rashi khanna 

Rajisha vijayan 

Chunkey panday

Laila

Yugi Sethu

Munishkanth 

Yog jaypee

Mohammad Ali Baig

Spelling

Ilavarasu

Master Rithvik 

Avinash

Balaji Sakthivel

Swaminathan

Aadhira Pandilakshmi

TSR.

and others. 


*Sardar Technicians*


production: Prince Pictures,

Director - P.S. Mithran,

Producer -  S.Lakshman Kumar,

Music composer - G.V. Prakash Kumar,

DOP - George C.Williams,

Editor - Ruben,

Art director - Kathir,

Stunt direction - Dilip Subbarayan,

Sound design - Tapas Nayak,

Writers- M.R.Pon Parthiban, Bipin Ragu, Roju,

Dance - Shobi paulraj,

Lyrics - Yugabharathi, Ekadasi, Arivu, Rokesh, GKB,

Coustme Designer - Praveen Raja,

Casting - Varsha Varadharajan,

Poster designer - Sivakumar (siva digital art)

Executive Producer 1- Kirubakaran Ramasamy, 

Executive Producer 2 - K.Velladurai,

Production Head and Chief Executive - A.Paal Pandi, 

PRO - Johnson.

No comments:

Post a Comment