Featured post

I think together we have created some magical moments”: Kriti Sanon opens up about working with Dhanush in Tere Ishk Mein

 *”I think together we have created some magical moments”: Kriti Sanon opens up about working with Dhanush in Tere Ishk Mein* _Tere Ishk Mei...

Sunday, 2 October 2022

THE WOMAN KING ஆங்கிலம் மற்றும் தமிழிலும்

 THE WOMAN KING 


ஆங்கிலம் மற்றும் தமிழிலும்


சரித்திர புகழ் மிக்க சாகச போர் காவியங்களை திரையில் வடிப்பதென்பது ஒரு சாமான்ய செயல்பாடன்று!

 இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம்! 



அந்த வகையில் , ஆப்ரிக்க தேசமான Dahomey இல் 1800 களில் , அந்த தேசத்தை காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட Agojie என பேர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை ஒரு காவியமாக திரையில் நடித்துள்ள படமிது!


உயரிய உடைஅலங்காரங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அசர வைக்கும் போர் காட்சிகள் என அதிக பொருட்செலவில் Sony Pictures நிறுவனம் உருவாகியுள்ள பரபரப்பூட்டும் படைப்பு தான் , The Woman King !

ஆராய்ச்சியின் அடிப்படையில், இவ்வாண்டில்  A + CinemaScore கௌரவத்தை பெற்ற இரு படங்களில் இதுவும் ஒன்று! 


இயக்குனர் முதல் இதர தொழில்நுட்ப கலைகள் வரை அதிகபட்சமாக பெண்களே பங்குபெறும் ஓர் உன்னதமாக தற்காப்பு போர் காவியம் இது!

Viola Davis , Thuso Mbedu மற்றும் Lashana Lynch (  அடுத்த பெண் 007 !) ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திட Gina Prince -Bythewood படத்தை இயக்கியுள்ளார்.

Dana Stevens மற்றும் Maria Bello திரைக்கதையை அமைக்க Cathy Schulman படத்தை தயாரிக்க Polly Morgan ஒளிப்பதிவை கவனிக்க Gersha Phillips உடைஅலங்காரத்திற்கு பொறுப்பேற்க மற்றும் பல பெண்கள் படத்தின் முன்ணணியிலும் பின்ணியிலும் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

Sony Pictures நிறுவனம் இப்படத்தை ஆங்கிலம் மற்றும் தமிழிலும் October 14th 2022 அன்று வெளியிடுகிறார்கள்!

No comments:

Post a Comment