Featured post

Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released

 *'Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released* *Vijay Sethupathi Shines as 'Bold Kannan' in the Up...

Saturday, 21 October 2023

அனைவரும் விரும்பும் அன்பான கூட்டணி நேச்சுரல்

 *அனைவரும் விரும்பும் அன்பான கூட்டணி நேச்சுரல் ஸ்டார் நானி,  விவேக் ஆத்ரேயா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணையும் - #Nani31 அறிவிப்பு வீடியோ அதிரடியாக வெளியாகியுள்ளது.*




முன்னணி நட்சத்திரமான நேச்சுரல் ஸ்டார் நானியும், அந்தே சுந்தராணிகி எனும் ஒரு கல்ட் எண்டர்டெய்னர் படத்தை வழங்கிய திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயாவும் #Nani31 மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். ஆஸ்கர் விருது வரை அசத்திய  RRR படத்தை வழங்கிய DVV தனய்யா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் கல்யாண் தாசரி இருவரும் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்கள். 


இந்த முறை இந்தக் கூட்டணி, மிகவும்  வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை அசத்தப்போகிறார்கள் என்பது,  இன்று வெளியான அறிவிப்பு வீடியோவில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. படப்பிடிப்பிற்கு முன்னதான முன் தயாரிப்பு பணிகளைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை இந்த சிறிய வீடியோ வழங்குகிறது. வீடியோவில் நானியின் வசீகரமிக்க தீவிரமான கண்கள் இந்த முறை  மிக உற்சாகமான விருந்து ரசிகர்களுக்கு காத்திருக்கிறது என்பதை  உறுதி செய்கிறது.


இந்த வீடியோவில் வரும் வண்ணங்கள், இசை அனைத்தும் இந்த படைப்பு மிக வித்தியாசமான ஜானரில் இருக்குமென்பதை  தெறிவிக்கிறது. வீடியோவின் இறுதியில், ஒரு அற்புதமான அப்டேட்டையும் தந்துள்ளனர் #Nani31  இம்மாதம் 23ஆம் தேதி ஆரம்பிக்ப்படவுள்ளது மேலும், முஹூர்த்தம் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.


#Nani31 படம் அற்புதமான நடிகர்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக் குழுவைக் கொண்டிருக்கும்.  அது பற்றிய விவரங்கள் பூஜையன்று வெளியிடப்படவுள்ளது.


https://x.com/DVVMovies/status/1715600976760164800?s=20

No comments:

Post a Comment