கத்ரீனாவும் நானும் ஒவ்வொரு முறையும் ஒரு பாடலில் இடம்பெறும்போது மக்களிடம் அதற்கான எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்து விடும்’ ; சல்மான்-கத்ரீனா இருவரும் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் ‘டைகர் 3’யின் “‘லேகே பிரபு கா நாம்” பாடலின் மூலம் நாட்டையே ஆடவைக்க போகிறார்கள்
மெகா ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் இந்திய சினிமா வரலாற்றில் எப்போதுமே மிகப்பெரிய ஆன்-ஸ்கிரீன் ஜோடி. அவர்கள் வரலாற்று வெற்றிகளையும் தலைமுறை தாண்டிய சூப்பர்ஹிட் பாடல்களையும் வழங்கியுள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் ஆதித்யா சோப்ராவின் ஸ்பை யுனிவர்ஸின் ‘டைகர் 3’யில் பெருமைமிக்க டைகர் மற்றும் சோயா என்கிற தங்களது சூப்பர் ஏஜென்ட் கதாபாத்திரங்களுக்கு மீண்டும் ஒருமுறை திரும்பியுள்ளனர்.
‘டைகர் 3’யின் டிரைலர் வெகுஜன மக்களிடம் வெறித்தனத்தை உருவாக்கியுள்ளதுடன் தற்போது இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படமாகவும் இது மாறியுள்ளது. தற்போது ஒரு பார்ட்டி பாடலான “லேகே பிரபு கா நாம்” என்கிற இந்தப்படத்தின் முதல் பாடலை நாளை காலை 11 மணிக்கு யஷ்ராஜ் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறது. சல்மான் கானும் கத்ரீனாவும் மீண்டும் இணைந்து ஆடுவதை பார்க்க இணையதளமும் மிகுந்த ஆவலில் இருக்கிறது.
சல்மான் கான் கூறும்போது, “கத்ரீனாவும் நானும் சில சிறந்த பாடல்களை ஒன்றாக பெற்றுள்ளோம். அதனாலேயே ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒரு பாடலில் இணையும்போது மக்களிடம் எதிர்பார்ப்பு வானளவு உயரும் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. “லேகே பிரபு கா நாம்” பாடல் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என உறுதியாக நம்புகிறேன்” என்கிறார்
மேலும் அவர் கூறும்போது, “நான் தனிப்பட்ட முறையில் ரொம்பவே விரும்பும் நடன பாடல் இது.. எனது திரையுலக பயணத்தில் சிறந்த நடனப் பாடல்களில் ஒன்றாக இது இருக்கும். உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்வித்த சூப்பர்ஹிட் பாடல்களை பெற்றதில் கத்ரீனாவும் நானும் அதிர்ஷ்டசாலிகளாகவே இருந்திருக்கிறோம். அந்தவகையில் இந்த “லேகே பிரபு கா நாம்” பாடலும் அந்த பட்டியலில் இடம்பிடிப்பதுடன் உலக அளவில் மிகப்பெரிய ஹிட் ஆகும் என நான் நம்புகிறேன்” என்கிறார்.
வெள்ளக்கிழமை வெளியிடப்பட்ட இந்த பாடலின் டீசர் உடனடியாக வைரலானது. பிரீத்தம் இசையமைப்பில் பென்னி தயாள் மற்றும் அனுஷா மணி பாடியுள்ள இந்தப்பாடலில் சல்மான் கானும் கத்ரீனாவும் நம்பமுடியாத கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த பாடலில் இவர்கள் இருவருக்குமான அழகிய தோற்றத்தை பார்க்கும்போது இது இந்த பண்டிகை சீசனில் ஒரு பார்ட்டி ஆந்ததமாக நிச்சயமாக மாறும்.
மனீஷ் சர்மா இயக்கியுள்ள ‘டைகர் 3’ இந்த வருடம் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறு தீபாவளியில் வெளியாகிறது.
No comments:
Post a Comment