Featured post

*#தளபதி-69 பத்திரிகை செய்தி!*

 *#தளபதி-69 பத்திரிகை செய்தி!* கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது பெருமைமிகு அடுத்த படைப்பான 'தளபதி'விஜய் அவர்களுடன் இணையும் தளபதி- 69 தம...

Tuesday 31 October 2023

நல்ல கதை வந்தால் ஓகே சொல்ல காத்திருக்கும் ரம்பா

நல்ல கதை வந்தால் ஓகே சொல்ல காத்திருக்கும் ரம்பா..






வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார் .அவரோடு வந்த சிம்ரன், லைலா கோதிகா போன்ற நடிகைகள் இன்று பல முக்கிய படங்களில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான மீண்டும் வந்துள்ளது. ஏற்கனவே தெலுங்கு படத்தில் வாய்ப்புகள் வந்தாலும், தமிழில் மீண்டும் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார். 


திரையுலகில் 20 வருடங்கள் 100 படங்களுக்குமேல் நடித்து திரையுலகின் நட்சத்திர நாயகியாக இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரம்பா. 90 கிட்ஸ்களின் உறக்கத்தை கெடுத்தவர், முன்னணி நடிகையாக கோலோச்சியவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றவுள்ளார். 


தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா, 1993 ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் கால்பதித்தார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்தார். 


உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்திய முழுதும் நட்சத்திரமாக ஜொலித்தார். 20 வருடங்களாக திரையுலகில் கோலோச்சிய இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவுத்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இது குறித்து நடிகை ரம்பா கூறுகையில்… 

திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும் புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்த போது, நடிப்பதை நிறுத்தி விட்டேன். இரண்டு பெண் குழந்தைகள்,ஒரு பையன் என அழகான குடும்பம், ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன், இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள்  என்னை ஞாபகாமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது. 


சினிமாவை தொடர்ந்து கவனித்து  கொண்டுதான் இருக்கிறேன், இப்போது சினொமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விசயங்கள்  பேசிக்கொண்டு இருப்பேன், என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில்,  நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில்  பார்க்கலாம் என்றார்.

No comments:

Post a Comment