Featured post

BOONIE BEARS: GUARDIAN CODE

 *BOONIE BEARS: GUARDIAN CODE* இது, அறிவியல் புனைக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். பூனி பியர்ஸ் த...

Wednesday 18 October 2023

தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ஜனவரி

 *தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ஜனவரி மாதம் பிரமாண்டமாக மினி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என அதன் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.*




கோவாவில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 446 விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். 


சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் 37 வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். 


கோவாவில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 9 ஆம் தேதி வரை  5 மையங்களில் நடைபெற உள்ள இந்த போட்டிகளில்  36 பிரிவுகளில் ,  446 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் 116 அதிகாரிகள் கொண்ட குழுவும் கோவா செல்கிறது. 


இவர்கள் அனைவரையும் ஐசரி கணேஷ் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கோவா வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் TNAA செயலாளர் சி.லதாவும் கலந்து கொண்டார்


அப்போது உரையாற்றிய பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டு வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற கனவு விரைவில் நனவாகும் என்றார். மேலும் அதற்கான முன்னோட்டமாக ஆசிய விளையாட்டு போட்டி பதக்கங்கள் வென்றுள்ளோம் என்றார். அவர்களை கௌரவிக்கும் விதமாக விரைவில் பிரமாண்ட விழா நடத்தப்படும் என்றும், அதில் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் தங்கள் பெற்றோருடன் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment