Featured post

Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers*

 Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers* The monumental project featuring Icon Star Allu Arjun in...

Monday, 23 October 2023

உற்சாக அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய கொண்டாட்ட பாடாலான

 *உற்சாக அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய  கொண்டாட்ட பாடாலான “லேகே பிரபு கா நாம்” என்கிற டைகர் 3யின்  முதல் பாடலை யஷ்ராஜ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது* 


மெகா ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் இந்திய சினிமா வரலாற்றில் எப்போதுமே மிகப்பெரிய ஆன்-ஸ்கிரீன் ஜோடி. அவர்கள் வரலாற்று வெற்றிகளையும் தலைமுறை தாண்டிய சூப்பர்ஹிட் பாடல்களையும் வழங்கியுள்ளனர். 


தற்போது இவர்கள் இருவரும் ஆதித்யா சோப்ராவின் ஸ்பை யுனிவர்ஸின் ‘டைகர் 3’யில் பெருமைமிக்க டைகர் மற்றும் சோயா என்கிற தங்களது சூப்பர் ஏஜென்ட் கதாபாத்திரங்களுக்கு மீண்டும் ஒருமுறை திரும்பியுள்ளனர்.


யஷ்ராஜ் பிலிம்ஸ் கடந்த வாரம் டைகர் 3யின் முதல் பாடலுக்கான டீசரை வெளியிட்டது. இதோ இன்று  கொண்டாட்ட பாடாலான “லேகே பிரபு கா நாம்” பாடலை வெளியிட்டுள்ளது. கடைசியாக ‘டைகர் ஜிந்தா ஹை’ படத்தில் இடம்பெற்ற அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த “ஸ்வாக் சே ஸ்வாகத்” பாடலுக்கு இந்த இரண்டு சூப்பர்ஸ்டார்களும் ஒன்றாக இணைந்து ஆடியதை தொடர்ந்து தற்போது இந்த பாடலுக்கான எதிர்பார்ப்புகள் வானளவு உயர்ந்து இருக்கின்றன. 


*சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் மீண்டும் ஒருமுறை உற்சாக அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய  தோற்றத்துடன் “லேகே பிரபு கா நாம்” பாடலுக்கு தங்கள் இதயம் நொறுங்கும் அளவுக்கு ஆடியுள்ள நடனத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்..*


https://www.youtube.com/watch?v=6GxXehkPyBs


பிரீத்தம் இசையமைப்பில் அமிதாப் பட்டாச்சார்யாவின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்தப்பாடலில் சல்மான் கானும் கத்ரீனாவும் நம்பமுடியாத கெமிஸ்ட்ரியையும் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய அதிரடி நடனத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். “லேகே பிரபு கா நாம்” பாடலின் ஹிந்தி வெர்ஷனை அர்ஜித் சிங் மற்றும் நிகிதா காந்தி இருவரும் பாடியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனை பென்னி தயாள் மற்றும் அனுஷா மணி பாடியுள்ளனர். “லேகே பிரபு கா நாம்” பாடல் மிக பிரமாண்ட பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் குழு துருக்கியின் கப்படோசியாவில் உள்ள பல்வேறு கவர்ச்சியான இடங்களுக்கு பயணித்திருக்கின்றனர். “ஸ்வாக் சே ஸ்வாகத்” பாடலுக்கு நடனம் வடிவமைத்த நடன இயக்குனர் வைபவி மெர்ச்சன்ட் சல்மான் கான் மற்றும் கத்ரீனா இருவரையும் மீண்டும் ஆடவைப்பதற்காக இதில் இணைந்துள்ளார். 


மனீஷ் சர்மா இயக்கியுள்ள ‘டைகர் 3’ இந்த வருடம் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறு தீபாவளியில் வெளியாகிறது.

No comments:

Post a Comment