Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Thursday, 26 October 2023

லேகே பிரபு கா நாம்” பாடலுக்கு கிடைத்த அன்பான வரவேற்பால்

 *“லேகே பிரபு கா நாம்” பாடலுக்கு கிடைத்த அன்பான வரவேற்பால் சல்மான் கான் – கத்ரீனா கைப் உற்சாகம்* 




பாலிவுட் மெகாஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் சமீபத்தில் ‘டைகர் 3’யிலிருந்து வெளியான ‘லேகே பிரப கா நாம்’ பாடல் உடனடி ஹிட் ஆனதை தொடர்ந்து ரொம்பவே உற்சாகமடைந்துள்ளார்கள். பிரீத்தம் இசையமைப்பில்  ஹிந்தியில் அர்ஜித் சிங் மற்றும் நிகிதா காந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் பென்னி தயாள் மற்றும் அனுஷா மணி ஆகியோரால் பாடப்பட்ட இந்த பாடல் இணையத்தை அடித்து நொறுக்கியுள்ளது. ரசிகர்கள் இந்தப்பாடலின் இசையையும் சல்மான் கான் மற்றும் கத்ரீனாவின் அதிரவைக்கும் கெமிஸ்ட்ரியையும் புகழ்ந்து வருகிறார்கள்.


சல்மான் கான் கூறும்போது, "இந்தப் பாடலுக்கான வரவேற்பு ரொம்பவே பாசிட்டிவாக இருப்பதுடன் இந்த பண்டிகை சீசனுக்காக ஒரு பார்ட்டி ஆந்தம் பாடலை ரசிகர்கள் எப்படி கண்டு கொண்டார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. என்னுடைய படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் எப்போதும் மக்களை மகிழ்விப்பதில் நான் சந்தோஷமாக உணர்கிறேன். மக்கள் எல்லாவற்றையும் மறந்து திரையரங்கிற்குள் நுழைந்து சினிமா சிருஷ்டிக்கும் புதிய உலகத்திற்குள் தங்களை இணைத்துக்கொள்ள செய்வதை விட பெரிய சந்தோஷம் என எதையும் நான் பார்த்ததில்லை” என்கிறார். 


மேலும் அவர் கூறுகையில், “பாடல்களும் நடனமும் நமது திரைப்படங்களில், கலாச்சாரத்தில் ஒரு பாகமாக இருக்கின்றன. அதனால் என்னுடைய படங்களின் பாடல்கள் மக்களை உற்சாகப்படுத்தும்போது நான் மகிழ்கிறேன். ஒரு பாடலுக்கான சம்பந்தம் என்பது தலைமுறைகளை கடந்து நிற்கும் என்பதை நான் எப்போதுமே நம்புகிறேன். அப்படி இதுபோன்ற சில பாடல்கள் என் திரையுலக பயணத்தில் எனக்கு அமைந்ததில் நான் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன். அந்தவகையில் “லேகே பிரபு கா நாம்” பாடலும் சரியான சமயத்தில் அவற்றில் ஒன்றாக மாறும்” என்கிறார். 


கத்ரீனா கூறுகையில், இத்தனை வருடங்களில் ஒரு நடிகையாக என்னுடைய ரசிகர்களின் அன்பு, மீடியா, மற்றும் பார்வையாளர்கள் தான் என்னை வழிநடத்தி செல்கிறது. வெற்றிக்கான உண்மையான உந்துசக்தி  என்பது மக்களிடம் இருந்து ஒருவர் பெறுகின்ற உண்மையான அன்பில் தான் இருக்கிறது. “லேகே பிரபு கா நாம்” பாடல் இந்த அளவுக்கு கொண்டாடப்படுவது எங்கள் அனைவருக்கும் அற்புதமான உணர்வாக இருக்கிறது. நடனம் என்பது என்னுடைய விருப்ப செயல்களில் ஒன்று. மேலும் பார்வையாளர்களின் அன்பு என்பது பரிசுத்தமான மகிழ்ச்சி” என்கிறார். 


பிரசித்தி பெற்ற ஹிட் நடனங்களை வழங்குவதற்கு பெயர் பெற்றவர் கத்ரீனா கைப் என்பதால் “லேகே பிரபு கா நாம்” பாடல் அவரது மின்னதிர்வேற்படுத்த கூடிய பார்ட்டி ஆந்தம்களில் ஒன்றாக ஆகிவிட்டது.. மக்கள் நடிகர்களிடம் இருந்து வெறும் நடிப்பு ஆற்றலை மட்டுமல்லாது நீண்டநாட்கள் மனதில் நிற்கும் விதமான பாடல்கள் மற்றும் நடனங்களுக்காகவும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளார்கள் என்பதை கத்ரீனா உணர்ந்தே இருக்கிறார்.   


கத்ரீனா கூறுகையில், “ஒரு படம், நடிப்புத்திறமை, ஒரு பாடல் என இவை அனைத்தும் வெற்றி என சொல்லப்பட வேண்டுமானால் பார்வையாளர்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. எனது திரையுலக பயணத்தின் வாயிலாக இதை கண்டுபிடித்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு படத்தில் நடிப்புத்திறனுடன் சேர்ந்து நாங்கள் நடிக்கும் பாடல்களையும் பார்த்து மக்கள் உற்சாகமடைகிறார்கள் என்பதும் எனக்கு தெரியும்” என்கிறார்.


மேலும் அவர் கூறும்போது, “இதை நான் மிகப்பெரிய பரிசாக எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் பாடல்களும் நடனமும் நமது கலாச்சாரத்தில் நமது திரைப்படங்களில் ஒரு பாகமாக இருப்பதுடன் காலம் காலமாக அவை நேசிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் வந்திருக்கின்றன.  நம் பாடல்களின் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அது ஒவ்வொரு முறையும் இன்னும் சிறந்த நடிப்பை தருவதற்கு எரிபொருளாக அமைகிறது என்பதையும் நான் அறிந்த இருக்கிறேன்” என்கிறார்.


யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படமாக ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கத்தில் இந்த ‘டைகர் 3’ உருவாகியுள்ளது. இந்தப்படம் இந்தவருட தீபாவளி ரிலீஸாக வரும் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது


லேகே பிரபு கா நாம் பாடலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் : 

https://www.youtube.com/watch?v=6GxXehkPyBs

No comments:

Post a Comment