Featured post

*City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights

 *City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights* The Court of the Chief Judge, Cit...

Tuesday, 24 October 2023

நேச்சுரல் ஸ்டார் நானி - விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ்

நேச்சுரல் ஸ்டார் நானி - விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணைந்திருக்கும் பான் இந்திய திரைப்படமான 'நானி 31' திரைப்படத்திற்கு  'சூர்யாவின் சனிக்கிழமை' என பெயரிடப்பட்டிருக்கிறது

'தசரா' படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் புகழடைந்து, 'ஹாய் நான்னா' எனும் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் 'நேச்சுரல் ஸ்டார்' நானி அடுத்ததாக 'அந்தே சுந்தரனிகி' போன்ற கல்ட் பொழுதுபோக்கு படைப்பை வழங்கிய திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா உடன் இணைகிறார். ஆஸ்கார் விருதை வென்ற 'ஆர் ஆர் ஆர்' எனும் திரைப்படத்திற்கு பிறகு, ''சூர்யாவின் சனிக்கிழமை'' படத்தை  டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது.

அண்மையில் ஒரு சிறிய வீடியோ உடன் இந்த படைப்பு குறித்து அறிவித்த தயாரிப்பாளர்கள், கட்டவிழ்க்கப்பட்ட- Unchained எனும் மற்றொரு புதிரான வீடியோ மூலம் இதன் தலைப்பை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஒரு நாளில் கட்டுப்படுத்த முடியாத கதாநாயகனின் அரிய மற்றும் தனித்துவமான தரத்தை விவரிக்கும் சாய் குமாரின் பின்னணி குரலில் அதிரடி நிரம்பிய அன்செயின்ட்- Unchained தொடங்குகிறது. சனிக்கிழமை அந்த விசேட நாள். இறுதியாக 'சூர்யாவின் சனிக்கிழமை' என  தலைப்பு வெளியிடப்படுகிறது. இந்த டைட்டில் அசாதாரணமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது. 

முற்றிலும் தனித்துவமான கருத்துக்களை முயற்சிக்கும் இயக்குநர் விவேக் ஆத்ரேயாவிடமிருந்து இது நிச்சயமாக எதிர்பார்க்கப்படுவதில்லை. மேலும் இந்த திரைப்படம் நானி முன் எப்போதும் இல்லாத ஒரு புதிய அவதாரத்தில் காண்பிக்கும் என்று இந்த அன்செயின்ட் - Unchained வீடியோ உறுதியளிக்கிறது. உண்மையில் நானிக்கு இங்கு ஒரு வீரம் மிகுந்த அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெற்றி பெற்று வெளியே வரும்போது மக்களின் முகத்தில் புன்னகை இருக்கும். இறுதி அத்தியாயம் கதாபாத்திரத்திற்கு போதுமான உயர்வை கொண்டு வருகிறது. 

வித்தியாசமான சப்ஜெக்டுகளில் முயற்சி செய்து கதாபாத்திரங்களின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் நடிகர் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் ஆச்சரியப்படுத்துகிறார். இவை அனைத்தும் நம்பிக்கைக்குரியதாக தெரிகிறது. டைட்டிலுக்கான பிரத்யேக வீடியோவில் நானியின் தோற்றம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, தயாரிப்பு தரம் ...என அனைத்தும் அசாதாரணமானதாக இருக்கிறது.‌

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கார்த்திக் ஸ்ரீநிவாஸ் கவனிக்கிறார்.

'சூர்யாவின் சனிக்கிழமை' பான் இந்திய திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தில் பணியாற்றும் இணை நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். இந்தத் திரைப்படம் நாளை தொடங்க உள்ளது.‌

https://youtu.be/8YnkDl05BTw*நேச்சுரல் ஸ்டார் நானி - விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணைந்திருக்கும் பான் இந்திய திரைப்படமான 'நானி 31' திரைப்படத்திற்கு 'சூர்யாவின் சனிக்கிழமை' என பெயரிடப்பட்டிருக்கிறது*

https://youtu.be/8YnkDl05BTw

No comments:

Post a Comment