Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Sunday, 2 June 2024

கண்ணன் ரவி குழுமத்தின்(கேஆர்ஜி)

 *கண்ணன் ரவி குழுமத்தின்(கேஆர்ஜி) 'பராக்' உணவகத்தின் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!* 










ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்குபவர் தமிழகத்தைச் சேர்ந்த கண்ணன் ரவி. இவரது கண்ணன் ரவி குழுமம் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளது.


தொடர்ந்து இவர்களது நிறுவனம் சார்பில் உணவகத் தொழிலிலும் கால் பதிக்கும் விதமாக அவர்களது முதலாவது ஃபுட் அண்ட் பேவரேஜஸ் யூனிட்டான 'பராக்' இந்தோ-அரேபிய உணவுகளை உள்ளடக்கிய உணவகத்தின் திறப்பு விழா கடந்த 26-05-2024(ஞாயிற்றுக்கிழமை) அன்று துபாய்,அல் கராமா, ஷேக் கலீஃபா-பின்-ஜாயித் சாலையில் அரசியல் மற்றும் திரையுலக   பிரபலங்கள் உள்ளிட்ட பலர் முன்னிலை வகிக்க இதன் திறப்பு விழா  பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.


இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கதிர் ஆனந்த், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திரு.தொல் திருமாவளவன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ்,

நடிகர்கள் மற்றும் நடிகைகள் சரத்குமார்-ராதிகா சரத்குமார், பாக்யராஜ்-பூர்ணிமா பாக்யராஜ், பிரகாஷ் ராஜ்,சுந்தர்.சி,வெங்கட் பிரபு,விஷால்,ஜெய்,சாந்தனு-கீர்த்தி சாந்தனு,கீர்த்தி சுரேஷ்,பிரியா ஆனந்த்,சித்தி இத்னானி, சாக்ஷி அகர்வால், அபர்னதி, இளவரசு, சதீஷ்,'ரோபோ'சங்கர்,'மஞ்ஞுமல் பாய்ஸ்' புகழ் சிஜு மற்றும் ஶ்ரீநாத் பாஸி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா,சேவியர் பிரிட்டோ,ஜெகதீஷ் பழனிசாமி, நடிகர்  ஜெயப்பிரகாஷ் , 'பஞ்சு'சுப்பு, இயக்குனர்கள் சித்ரா லக்ஷ்மணன்,கங்கை அமரன், நடன இயக்குனர்கள் ஶ்ரீதர் மற்றும் அக்ஷதா ஶ்ரீதர், யூடிபர்களான விக்னேஷ் காந்த் மற்றும் இர்ஃபான்,மருத்துவர் ஹரிஹரன், தொழில்முனைவோர் வெங்கட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு,இந்த பிரம்மாண்ட துவக்க விழாவை மாபெரும் வெற்றிகரமான நிகழ்வாக மாற்றி சிறப்பித்தனர்.


கண்ணன் ரவி குழுமத்தின் தலைவர் 'கண்ணன் ரவி' தீபக் கண்ணன் ரவி இருவரும் விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் 

அனைவரையும் வரவேற்று,உபசரித்து,நன்றி தெரிவித்தனர் .

No comments:

Post a Comment