Featured post

Makers of The India Story Drop a Hard-Hitting Promo Exposing Food Adulteration in India

 Makers of The India Story Drop a Hard-Hitting Promo Exposing Food Adulteration in India* Presented by Zee Studios in association with MIG P...

Tuesday, 16 April 2019

பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்



 எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் "
இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
மற்றும் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர்கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர்ஸ்ரீலேகாஸ்ரீஜாகே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின்மேஜர் கவுதம்சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணாராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..


 ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர்
இசை  -   இளையராஜா
பாடல்கள்  -  பழனிபாரதிஜெய்ராம்
கலை  -   மிலன்
ஸ்டண்ட்  -   அனல் அரசு
எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர்
நடனம்   -      பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு  -    கெளசல்யா ராணி
படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடை பெற்றது...இரண்டு கட்டமாக நடை பெற்ற படப்பிடிப்பு முடிவடைந்தது...
 அதிரடி ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வருகிறது... .

 இந்த படத்திற்காக இளையராஜா இசையில்
 ஜெயராம் எழுதிய 
"பொறுத்தது போதும் 
 பொங்கிட வேணும் 
புயலென வா " என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவானது...
2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இந்த தமிழரசன் படத்தில் பாடியது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மரியாதை என்கிறது படக்குழு.


 ஜேசுதாஸுக்கு பூங்கொடுத்து இளையராஜாவும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் g.சிவா ஆகியோர் வரவேற்றனர்..
படத்தில் விஜய் ஆண்டனி பாடும் புரட்சிகரமான பாடலாக ஒலிக்கப் போகிறது

No comments:

Post a Comment