Featured post

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும்

 *நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!* பார்வையாளர்களை இற...

Showing posts with label dhanush. Show all posts
Showing posts with label dhanush. Show all posts

Wednesday, 23 June 2021

தனுஷ் காட்டிய அன்பு - இனிய

 தனுஷ் காட்டிய அன்பு - இனிய சம்பவத்தை நினைவு கூறும் நடிகர் கலையரசன் ! 

Netflix ல் வெளியாகியுள்ள “ஜகமே தந்திரம்” திரைப்படம்  ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரு வெற்றி பெற்றிருக்கிறது. இணையம் முழுக்க “ஜகமே தந்திரம்” பற்றிய பேச்சு தான் எங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குநர் கார்த்திக சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ், ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், சரத் ரவி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. இரவு பகலாக இணைந்து நடித்துள்ள இந்த நடிகர் பட்டாளம், திரைக்கு பின்னால், மிகச்சிறந்த இனிய நட்பினை பேணி வருகிறார்கள். நடிகர் கலையரசன் படப்பிடிப்பில் தனுஷ் தன்னிடம் எவ்வளவு இனிமையாக நடந்து கொண்டார் என்பது குறித்தான இனிய நினைவுகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார். 

நடிகர் கலையரசன் பகிர்ந்து கொண்டதாவது...

இங்கிலாந்தில் பனி மிக அதிகம. கடும் குளிர் வாட்டி எடுக்கும்.  நான் இந்தியாவில் இருந்து திரும்பியிருந்தேன். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கும் சமயம் எல்லாம் கடுமையான குளிர் காரணமாக என்னால் காரை விட்டே இறங்க முடியவில்லை. படத்தின் இடைவேளை காட்சி Canterbury யில் எடுக்கப்பட்டது அப்போதெல்லாம் அங்கு கடும் குளிர் நிலவியது. அங்கு கேரவனும் இல்லை என்னுடைய அறையும் வெகு தொலைவில் இருந்தது. வழக்கமாக இரவு நேர படப்பிடிப்பில் நான் தூங்க மாட்டேன். ஏனெனில் தூக்க கலகத்தில் கதாப்பாத்திரத்தை சரியாக செய்ய முடியாது அதனால் அந்த குளிரில் என் நடுக்கத்தை தவிர்க்க படப்பிடிப்பில் ஒரு ஓரமாக ஒதுங்கியிருந்தேன். என் நடுக்கத்தை கண்ட  நடிகர் தனுஷ், அப்போது தான் புதிதாக அவர் வாங்கியிருந்த, அவரது குளிர் தாங்கும் தெர்மல் ஆடையினை எனக்கு தந்தார். அவரது செயல் என் மனதில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் ஒரு பெரிய நடிகர் போன்ற பந்தா இல்லாமல் அனைவரிடமும் மிக எளிமையாக பழகினார். எல்லோருடத்திலும் மிக நட்புடன் அன்பு காட்டினார் என்றார். 












நடிகர்கள்கள் தங்களுக்குள் உணரும் நெருக்கமான நட்பின் உணர்வினை “ஜகமே தந்திரம்” படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நீங்கள் காணலாம்.  கண்டுகளியுங்கள் “ஜகமே தந்திரம்” படத்தினை Netflix தளத்தில்.

Dhanush’s sweet gestures on the sets of

 Dhanush’s sweet gestures on the sets of Jagame Thandhiram!

Netflix’s Jagame Thandhiram has been grabbing eyeballs and entertaining all since its release on Netflix. Directed by Karthik Subbaraj, the film stars superstar Dhanush,  Aishwarya Lekshmi, Joju George, James Cosmo, Kalaiyarasan, Sharath Ravi in interesting roles. The cast has been shooting together day and night and share a great bond off screen! Actor Kalaiyarasan shares a sweet secret about Dhanush during their shooting schedule in the UK.











Talking about Dhanush, Kalaiyarasan said, “It was very cold in the UK. I was returning from India, and I had a fever. I could not even get out of the car during the climax. London’s winter is extreme. The interval shot was done in Canterbury which had extreme cold weather. There was no caravan and my room was very far away. I usually don't sleep during night shoots because getting back into the mood for a scene is extremely difficult. I went and sat in a corner of the base area trying to contain myself from shivering. Dhanush saw me shivering and immediately got me his thermal wear which was very nice. He had just purchased it and had given it to me instantly”

You can almost feel the bond they built through each scene of the film - catch Jagame Thandhiram only on Netflix!

Friday, 4 June 2021

இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தனுசின்

இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை  தனுசின்" கர்ணன் "  கார்த்தியின் " சுல்தான் " பெரிய படங்கள் உட்பட சிறு முதலீட்டுப் படங்கள் திரைக்கு வந்து கொண்டிருந்தன.

கொரோனா உச்சத்தை தொட ஆரம்பித்த உடன் படங்களின் ரிலீசுக்கு தடை வந்தது.

காகித பூக்கள்,  உழைக்கும் கரங்கள்,  சினிமா கனவுகள், இளஞ்ஜோடிகள், இது கதை அல்ல நிஜம், வீரமகன், இளவரசி, வைரி, சில்லாட்ட, பூதமங்கலம் போஸ்ட் , டம்மி ஜோக்கர், பிரம்மபுரி, வாழ்க ஜனநாயகம், இரவா இரவு ,  உத்ரா, கபாலி டாக்கீஸ், எல்லைக்காவலன், பிறர்தர வாரா, சின்ன பண்ணை பெரிய பண்ணை, நெஞ்சாக்கூட்டில், வெற்றித்திருமகன்,
ஆகிய படங்கள் உட்பட 50 படங்கள் திரைஅரங்குகள் திறக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

கொரோனா காலம் முடிந்த உடன் படங்களை ரிலீஸ் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள்., வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கூடிப்பேச வேண்டும் என்று திரை உலகினர் எதிர்பார்க்கின்றனர் என்கிறார் சீனியரான அந்த இயக்குனர்.

Friday, 27 December 2019

பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்!

பட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின்  “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்! 

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரு வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல்  ஒரே இரவில்  ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரு வெற்றியடைந்துள்ளது.  “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறது. மேலும் அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.




அனிருத்துடன்  இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறியதாவது...

அனிருத் எப்போதும் எங்களுக்கு நண்பருக்கு மேலானவர். அவர் எங்களின் சகோதரர் போன்றவர். அவரை எங்கள் இசையில் பாட வைப்பது எங்களது நெடுநாளைய கனவு. ஜிகிடி கில்லாடியில் அது நிறைவேறியிருப்பது எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. “ஜிகிடி கில்லாடி” பாடல் எங்கள் மனதுக்கு நெருக்கமான ஒன்று. தனுஷ் அனிருத் கூட்டணி என்பது எப்போதும் வெற்றி கூட்டணி. இப்பாடலின் அசுர வெற்றி அதனை மீண்டும் நிரூபித்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.


“பட்டாஸ்” படத்தில் பணிபுரிந்தது குறித்து விவேக் கூறியாதவது...

நாங்கள் இருவரும் தனுஷ் சாரின் “பட்டாஸ்” படத்தில் கடந்த 8 முதல் 9 மாதங்களாக பணிபுரிந்து வருகிறோம். இந்த பயணத்தின் ஒவ்வொரு நொடியும் பெரும்   மகிழ்சியானதாகவே இருந்திருக்கிறது. பாடல்களை உருவாக்க ஆரம்பித்த தருணம் முதல் இப்போது  ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் இந்த தருணம் வரை எங்களுக்கு மகிழ்ச்சியின் பயணமாகவே அமைந்துள்ளது. ஒரு வகையில் இந்த பணியில் எங்கள் முன் மிகப்பெரிய பொறுப்பு இருந்தது. நானும் மெர்வினும் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம் நாங்கள் செய்யும் பாடல்களில் புதுமையையும், நேர்த்தியையும், பாடலுக்குரிய நியாயத்தையும் உண்மையாக தர உழைத்தோம். எந்த இடத்திலும் இது எங்களது முந்தைய பாடல்களை பிரதிபலித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். “பட்டாஸ்” எங்கள் சினிமா  பயணத்தில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.  இப்போது மூன்று பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. மற்ற பாடல்களும் இதே போன்று  இனிமையானதாக, புத்துணர்வு தரும்  பாடல்களாக இருக்கும். என்றார்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில்  T.G. தியாகராஜன் தயாரிக்க இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள “பட்டாஸ்” படத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். மெஹ்ரீன் பிர்ஸாடா, சினேகா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். நவீன் சந்திரா எதிர்மறை நாயகன் பாத்திரத்தில் நடித்துள்ளார். 2020 ஜனவரி 16 வெளியாகும் இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை பிரமாண்டமாக வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு வருகிறது.

The overnight success of Pattas single ‘Jigidi Killadi’

The overnight success of Pattas single ‘Jigidi Killadi’ 

Dhanush starrer ‘Pattas’ has been synonymously creating a vivid phase of celebrations with its colorful first look posters followed by the single tracks. Following the tremendous response to ‘Chill Bro’ and ‘Mor attu Thamizhan Da’, the third single ‘Jigidi Killaadi’ crooned by Anirudh that was unveiled last evening has become an overnight chartbuster. Well, this swifts music directors Vivek-Mervin duo straight to the seventh heaven. Especially, they feel abundantly gleeful for their collaboration with close buddy Anirudh has became yet another feather to their hats.




Vivek says, “Anirudh is more than a friend to us and we have always shared a brotherly bonding. We have always wanted him to croon a song for our albums and Jigidi Killaadi is really special to us. Of course, the erstwhile collaborations of DnA (Dhanush ‘n’ Anirudh) combo has always witnessed rocking results and the instant overnight positive response to this song is leaving us marveled.”

Speaking about their experience of working in Pattas, Vivek adds, “Both of us have been involved with Dhanush sir’s Pattas for nearly 8-9 months and it’s been a journey of non-stop excitements. From the process of composing tunes and finding a mammoth reception has been landing us on overjoyed state. In fact, it has been a phase of mixed emotions for it wasn’t just about elations, but baggage of responsibilities too. One thing that myself and Mervin were clear about was to show uniqueness in genre with every track. We didn’t want them resemble each other even at the minutest level as ‘Pattas’ is the ever biggest project in our career. Now we are extremely happy with the reception towards all the three songs and assure that rest of the songs will be unique and refreshing as well.”

Bankrolled by T.G. Thyagarajan of Sathya Jyothi Films and directed by R.S. Durai Senthilkumar, Dhanush will be seen playing dual roles in ‘Pattas’. Mehreen Pirzada and Sneha will be essaying the female lead roles and Naveen Chandra plays the antagonist. With the film scheduled for worldwide release on January 16, 2020, the makers are planning to release rest of the songs and trailer shortly.

Monday, 16 December 2019

Producer T.G. Thyagarajan on Dhanush starrer ‘Pattas’

 Producer T.G. Thyagarajan on Dhanush starrer ‘Pattas’ 

It looks like the month of January is getting more fortunate and auspicious for the prestigious banner of Sathya Jyothi Films. While the production house endeavoured with a successful venture through Ajith Kumar’s Viswasam for this year, it is now gearing up with ‘Pattas’ starring Dhanush in lead role, hitting screens on January 16, 2020 . The official news comes straight from Sathya Jyothi Films with the first look motion poster, which is trending on all micro-blogging and media hubs.




Much delighted producer T.G. Thyagarajan says, “Gifting decent family entertainers has been the motto of Sathya Jyothi Films and we have been ritually following this practice across years. We always feel the month of January as an auspicious month for it doesn’t mark the festivity of harvest alone, but remains as a joyful union of family members in Tamil Nadu due to the festival mode. This year began to us through ‘Viswasam’ and now we are happily looking forward to present Dhanush’s Pattas on January 16, 2020 . 


This will be an out and out entertainer that will enthrall not just the diehard league of Dhanush fans alone, but universal audiences. It has action, fun, romance, music and emotions packaged very well. We specially thank our director R.S. Durai Senthilkumar for making this happen with his entertaining story and engaging narration.  

Apart from being expert in writing and presenting the film, Durai owns a special quality of being producer friendly. He is one of the strongest reasons for completing the entire project smoothly. Dhanush and Sathya Jyothi Films has been journeying together across the years and ‘Pattas’ will be a special memory for both of us. 

Despite his busy schedules with multiple projects, he completed the shooting as he promised on time. With the colourful youth look in first look and matured avatar in this newly released motion poster, he will amuse the crowds with his diversified characters. Be it Naveen Chandra, Sneha or Mehreen Pirzada, everyone in the star-cast has given their best. We will be soon making announcements on the audio and trailer release dates.”

Vivek-Mevin’s musical score with the first single ‘Chill Bro’ has already created a huge sensation. Om Prakash is handling cinematography and Prakash Mabbu is the editor. Durairaj (Editor), Dhilip Subrayan (Stunts), Jani (Choreography), Vivek, Vivek-Mervin (Lyrics), Anu Vardhan and Dhatsha A Pillai (Costumes), S.P. Suresh (Stills), Udhay Kumar (Sound Design) and Harihara Sudhan (VFX) form the technical crew. Produced by T.G. Thyagarajan for Sathya Jyothi Films, G. Saravanan and Sai Siddarth have co-produced this film.


Friday, 12 October 2018

Celebrities at Vada Chennai Press Meet

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.























































பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியவை : 

வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை அடுத்து நானும் வெற்றிமாறனும் அடுத்த படத்தில் சேர இருக்கிறோம். ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. வரும் 17ம் தேதி வடசென்னை படம் ரிலீஸ் ஆகிறது. உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும். படத்தில் அமீர் சார் வேற லெவல நடிச்சிருக்கார். என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உடன் நடித்த ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,மற்றும் அனைவருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. சந்தோஷ் நாராயணன் பெரிய இசை படத்திற்கு பிளஸ். பாடல் அனைத்தும் அருமையாக உள்ளது .வேல்ராஜ் ராஜ் சார் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இரவு பகல் பாராமல் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியவை...

படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சிகளும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின்  வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும்.. அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார். அவரின் பேச்சு.. நடிப்பு ஜடை. அசத்தியுள்ளார். கலை இயக்குனர் ஜாக்கிங் ஜெயில் செட் மற்றும்  வடசென்னை சட்டை மிகப் பிரமாதமாக செய்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய நன்றி. படத்தில் நடித்த ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி பவன் , சமுத்திரகனி கிஷோர் அற்புதமாக நடித்துள்ளார்கள்,. மேலும் அமீர், சமுத்திரகனி ஒரு இயக்குனர்களாக எனக்கு சிறிது உறுதுணையாக இருந்தார்கள்.. படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  பேசியவை..

இந்த படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி மேடையை பார்க்கும்போது காக்கா முட்டை படத்தில் நடந்த விழா ஒன்று ஞாபகம் வருகிறது. இந்த படத்தில் ஒரு இனிமையான  கதாபாத்திரம் நடித்துள்ளேன். தனுஷ் அவர்களுடன் முதல் முதலாக ஜோடியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. படத்தின் முதல் சீனில் பார்த்தவுடன் என்னை லவ் பண்ணுவார் தனுஷ் . படத்தில் அனைவருமே நன்றாக. நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அருமையாக வந்துள்ளது.. படத்தில் நடித்துள்ள அனைவருக்குமே எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகை ஆண்ட்ரியா பேசியவை.
படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி .இந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் .சக்சஸ்மீட்டில் சந்திக்கிறேன் இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார் பேசினார்.

இந்த விழாவில் நடிகர் மற்றும் இயக்குனரான அமீர் பேசியவை... 

வடசென்னை படத்தை பார்த்தேன் ஒரு ரசிகனாக. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. தனுஷ் அவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.வெற்றிமாறன் ஒரு தரமான படத்தினை இயக்கியுள்ளார்.ஆண்ட்ரியா தரமணி போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நாம் பார்த்திருக்கிறோம் .இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைவருமே மிகவும் அருமையாக நடித்துள்ளனர் இந்த படத்தின். சக்சஸ்மீட்டில் சந்திக்கிறேன் மீண்டும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியவை

இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு முதல் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மாதிரி படங்கள்  வெற்றிமாறனால் மட்டுமே இயக்க முடியும் .படத்தில் தனுஷ் அவர்கள் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, திறமையான நடிகர். வெற்றிமாறன் அவர்களுடன் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ் .என்னுடைய வாழ்த்துக்கள்.

நடிகை ஆண்ட்ரியா பேசியவை:
'படத்தில் வாய்ப்பளித்த  வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. இந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் .சக்சஸ் மீட்டில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்' இவ்வாறு ஆண்ட்ரியா பேசினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பவன் பேசியவை... 
படத்திற்கு A   சென்சார் சர்டிபிகேட் வந்துள்ளதாக இயக்குனர் கூறினார் .எந்த காட்சியுமே கட், ஆகாமல் வந்துள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் டேனியல் பாலாஜி பேசியவை:

பொல்லாதவன் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து உள்ளேன் .வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி .ஒரு வித்தியாசமான  கதாபாத்திரம் எனக்கு தந்துள்ளார்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.