Featured post

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

 பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது ! நடிகர் சங்கம் அறிவிப்பு! பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960...

Showing posts with label ameer. Show all posts
Showing posts with label ameer. Show all posts

Tuesday, 21 January 2020

தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் அமீர்

"தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் அமீர்."

"என் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் -யுவன் சங்கர் ராஜா."

"வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்வது நல்லதல்ல - இயக்குனர் அமீர்."

"இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்குள் வந்ததால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது - இயக்குனர் அமீர்."


ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
 இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

Click here to Watch  Maayanadhi Audio Launch Videos:  https://www.youtube.com/channel/UCzBDhdHwVDDOqQ6RRe-gFZg/playlists











இசை அமைப்பாளர் பவதாரிணி பேசும்போது, ‘எல்லாருக்கும் நன்றி. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. யுவன் அமீர் சாருக்கு நன்றி. படத்தில் பாடிய சிங்கர்ஸுக்கும் நன்றி’ என்றார்
.

இயக்குனர் அசோக் தியாகராஜன் பேசியதாவது, ‘இந்த மேடையை அலங்கரிக்கிற சினிமா ஜாம்பவான்களுக்கு நன்றி. நம் வாழ்க்கையும் நதிபோல் தான் நம்மால் கணிக்க முடியாத ஒன்று. அதுதான் மாயநதி படம். நதி நிறைய திருப்பங்கள் கொண்டது. நம் வாழ்க்கையில் நிறைய பக்கங்களை பெண்கள் தான் நிரப்பி வருகிறார்கள். படத்தில் மிக எதார்த்தமாக நடித்துள்ள நாயகன் அபி சரவணன், நாயகி வெண்பா ஆகியோருக்கு நன்றி. மேலும் படத்தில் ஒத்துழைத்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த விழாவில் ஹீரோயின் இசை அமைப்பாளர் பவதாரிணி மேடம் தான். எல்லாப் பாடல்களையும் மிகச்சிறப்பாக தந்துள்ளார். இந்தப்படத்தை தனிப்பட்ட முறையில் உருவாக்கி விடவில்லை. ஒரு டீமாக இருந்து தான் உருவாக்கினோம். இசைஞானி இளையராஜா பாடல்கள் தான் நம் கவலைகளை ஆற்றுப்படுத்தியது. சந்தோஷத்தை அதிகப்படுத்தியது. அவர் வீட்டில் இருந்து இந்த விழாவிற்கு வருகை தந்த யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி" என்றார்
.

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, ‘பவதாரிணி இசை பற்றி நான் சொல்றது எப்படி இருக்கும்னு தெரியல. இந்தப்படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லாருக்கு. இசை எங்க ரத்தத்துல இருக்கு. என் கை பிடிச்சி வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான். என்னை இந்தளவிற்கு கூட்டிட்டு வந்தது அக்கா தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்றார்
.

அமீர் பேசியதாவது, ‘இரண்டு நாட்களுக்கு முன்னாடி சுப்பிரமணிய சிவா இந்த விழாவிற்கு கூப்பிட்டார். நான் யோசிச்சேன். அப்புறம் பவதாரிணி இசை என்று சொன்னார்கள். என்னால் எதுவும் பேச முடியல. உடனே வருகிறேன் என்றேன். நடிகர் அபி சரவணன், கேமராமேன், என எல்லாரும் எனக்கு நெருக்கமானவர்கள். உலக வரலாற்றிலே இளையராஜா குடும்பம் போன்று உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இப்படி ஒரு குடும்பம் தமிழ்க்குடும்பமாக கிடைத்தது நாம் செய்த பாக்கியம். எம்.ஜி.ஆர் இன்று வரை நினைவுகூரப்படுகிறது. ஆனால் அவரோடு வேலை செய்தவர்களிடம் நிறைய விசயங்களை கேட்டு பதிவு செய்ய வேண்டும்..


நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன்சங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும். இதை எல்லாம் அரசு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். நம் சங்கங்கள் எல்லாம் இப்போது மூடுவிழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால் அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை என்பது வேற. அரசியல் என்பது வேற. இங்கு பொது விசயங்களை செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்து இருக்கிறேன். தமிழ்சினிமாவில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் சினிமா தான் இங்கு ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா முன்னேறவே இல்லை. இங்கு சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகியோரிடம் இருந்த ஆட்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொண்டார்கள். அவர்கள் சினிமாவிற்கு எதுவும் செய்யவில்லை.

கலைஞர், எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியை அமைத்தார். ஜெயலலிதா வந்ததும் அந்தப்பெயரை மாற்றினார். ஆனால் சினிமா ஆட்கள் உடனே இந்த இதை மறுத்து ஜெயலலிதாவிடம் முறையிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதனால் கலைஞர் திரும்ப ஆட்சிக்கு வந்ததும் அந்த இடத்தில் பாதியை டைட்டில் பார்க்குக்கு கொடுத்து விட்டார்.

அதுபோல் கலைஞர் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கொடுப்பதற்கு இடம் ஒதுக்கினார். அதுவும் நடக்கவில்லை. இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது என்று யோசிக்கிறேன். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்றால் அவர் எந்தப்பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன்.

இந்த மாயநதி என்ற திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியடையணும். ஒரு ஆரோக்கியமான சூழல் சினிமாவிற்கு வரணும். இந்த விழா சிறியதாக ஆரம்பித்து பெரிதாக முடிந்திருக்கிறது" என்றார்.
உங்கள் மேலான அன்பையும் 
ஆதரவையும் தொடர்ந்து விரும்பும்...

Friday, 26 October 2018

Vada Chennai scenes deleted

Vada Chennai scenes deleted

Dhanush- Vetri Maaran’s  Vada Chennai movie, which released recently has gone on to become a blockbuster. The movie highlights the lives of people in North Chennai, especially the fisher folk. However, a scene in the film has not gone down well with them. 



The love-making scene between Ameer and Andrea in a boat in the middle of the ocean, has irked the people belonging to the community. They have apparently said that boats and catamarans are sacred to them and the scene had hurt their sentiments.

Now the production has removed the scene and two other scenes of Ameer & Andrea have been added & the issue has been amicably settled...


இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து  ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர்,ஆண்ட்ரியா  நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர். 

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ்  பேசும் வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Friday, 12 October 2018

Celebrities at Vada Chennai Press Meet

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.























































பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியவை : 

வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை அடுத்து நானும் வெற்றிமாறனும் அடுத்த படத்தில் சேர இருக்கிறோம். ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. வரும் 17ம் தேதி வடசென்னை படம் ரிலீஸ் ஆகிறது. உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும். படத்தில் அமீர் சார் வேற லெவல நடிச்சிருக்கார். என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உடன் நடித்த ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,மற்றும் அனைவருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. சந்தோஷ் நாராயணன் பெரிய இசை படத்திற்கு பிளஸ். பாடல் அனைத்தும் அருமையாக உள்ளது .வேல்ராஜ் ராஜ் சார் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இரவு பகல் பாராமல் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியவை...

படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சிகளும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின்  வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும்.. அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார். அவரின் பேச்சு.. நடிப்பு ஜடை. அசத்தியுள்ளார். கலை இயக்குனர் ஜாக்கிங் ஜெயில் செட் மற்றும்  வடசென்னை சட்டை மிகப் பிரமாதமாக செய்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய நன்றி. படத்தில் நடித்த ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி பவன் , சமுத்திரகனி கிஷோர் அற்புதமாக நடித்துள்ளார்கள்,. மேலும் அமீர், சமுத்திரகனி ஒரு இயக்குனர்களாக எனக்கு சிறிது உறுதுணையாக இருந்தார்கள்.. படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  பேசியவை..

இந்த படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி மேடையை பார்க்கும்போது காக்கா முட்டை படத்தில் நடந்த விழா ஒன்று ஞாபகம் வருகிறது. இந்த படத்தில் ஒரு இனிமையான  கதாபாத்திரம் நடித்துள்ளேன். தனுஷ் அவர்களுடன் முதல் முதலாக ஜோடியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. படத்தின் முதல் சீனில் பார்த்தவுடன் என்னை லவ் பண்ணுவார் தனுஷ் . படத்தில் அனைவருமே நன்றாக. நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அருமையாக வந்துள்ளது.. படத்தில் நடித்துள்ள அனைவருக்குமே எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகை ஆண்ட்ரியா பேசியவை.
படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி .இந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் .சக்சஸ்மீட்டில் சந்திக்கிறேன் இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார் பேசினார்.

இந்த விழாவில் நடிகர் மற்றும் இயக்குனரான அமீர் பேசியவை... 

வடசென்னை படத்தை பார்த்தேன் ஒரு ரசிகனாக. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. தனுஷ் அவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.வெற்றிமாறன் ஒரு தரமான படத்தினை இயக்கியுள்ளார்.ஆண்ட்ரியா தரமணி போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நாம் பார்த்திருக்கிறோம் .இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைவருமே மிகவும் அருமையாக நடித்துள்ளனர் இந்த படத்தின். சக்சஸ்மீட்டில் சந்திக்கிறேன் மீண்டும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியவை

இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு முதல் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மாதிரி படங்கள்  வெற்றிமாறனால் மட்டுமே இயக்க முடியும் .படத்தில் தனுஷ் அவர்கள் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, திறமையான நடிகர். வெற்றிமாறன் அவர்களுடன் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ் .என்னுடைய வாழ்த்துக்கள்.

நடிகை ஆண்ட்ரியா பேசியவை:
'படத்தில் வாய்ப்பளித்த  வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. இந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் .சக்சஸ் மீட்டில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்' இவ்வாறு ஆண்ட்ரியா பேசினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பவன் பேசியவை... 
படத்திற்கு A   சென்சார் சர்டிபிகேட் வந்துள்ளதாக இயக்குனர் கூறினார் .எந்த காட்சியுமே கட், ஆகாமல் வந்துள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் டேனியல் பாலாஜி பேசியவை:

பொல்லாதவன் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து உள்ளேன் .வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி .ஒரு வித்தியாசமான  கதாபாத்திரம் எனக்கு தந்துள்ளார்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.