Featured post

Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan

 Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan* Following the resounding theatrical success of Bison Kaalamaad...

Monday, 2 October 2023

NEW ACHIEVEMENT UNLOCKED! Shah Rukh Khan innaugrates the 600 cr Club

 *NEW ACHIEVEMENT  UNLOCKED! Shah Rukh Khan innaugrates the 600 cr Club! Becomes the only actor to achieve the feat with Jawan in JUST 25 days! Making it the only hindi film ever to do so.*



_This is also the HIGHEST 4th weekend ever for a hindi film!_


Jawan is not only SRK’s second film to become the top grosser, but it also the first hindi film to breach the 600cr mark and that too in just 25 days, and with the fourth week going on, the film is still rock steady!


Jawan raked in 547.79 crores in Hindi and a grand total of 607.21 crores net  at the Indian box office, while at the global box office, the film has broken all records by garnering 1000 crores and stands tall at a monstrous 1043.21 crore worldwide! All of these massive numbers and records were broken in just 25 days!


Shah Rukh Khan starrer Jawan went on to become the highest grossing Hindi film ever in the history of Indian cinema, and he makes history yet again by breaking records and setting new benchmarks for the industry.


Red Chilies Entertainment's Jawan, starring Shah Rukh Khan, is synonymous with the word history. Since its release on September 7, 2023, the film has been rewriting history at the box office, writing new records, and attaining massive numbers at the box office.


Jawan's performance is unaffected by the new releases, and it is a clear sign that fans are adoring the film and lavishing praise on it even in its fourth week.

புதிய சாதனை ! 600 கோடி கிளப்பை துவக்கிய ஷாருக்கான்! ஜவான்

 *புதிய சாதனை ! 600 கோடி கிளப்பை துவக்கிய ஷாருக்கான்! ஜவான் மூலம் 25 நாட்களில் இந்த சாதனையை புரிந்த ஒரே நடிகர் ஷாருக்கான் ! இதுவரை இந்த சாதனையை  செய்த ஒரே இந்திப் படமெனும் பெருமையை ஜவான்  பெற்றுள்ளது !*



_ இந்திப் படமொன்றின் மிக உயர்ந்த 4வது வார வசூல் சாதனையும் இதுவே!_


ஜவான் அதிக வசூல் செய்த SRK இன் இரண்டாவது படம் மட்டுமல்ல, 25 நாட்களில் 600 கோடியை தாண்டிய முதல் இந்தி படமாகும், மேலும் நான்காவது வாரத்தில் படம் இன்னும் வசூலில் நிலையான சாதனை படைத்து வருகிறது !


ஜவான் இந்தியில் 547.79 கோடிகள் மற்றும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 607.21 கோடிகளை ஈட்டியுள்ளது, அதே நேரத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில், படம் 1000 கோடிகளை வசூலித்து அனைத்து சாதனைகளையும் முறியடித்து, உலகம் முழுவதுமாக 1043.21 கோடியை வசூலித்து சாதனை செய்துள்ளது! இந்த மகத்தான சாதனைகள்  அனைத்தும் வெறும் 25 நாட்களில் முறியடிக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது !


ஷாருக்கான் நடிப்பில் உருவான  ஜவான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த இந்திப் படமாக மாறியுள்ளது, மேலும் அவர் சாதனைகளை முறியடித்து, திரைத்துறை வசூல் வரையறைகளை மாற்றி அமைத்ததன் மூலம் மீண்டும் சரித்திரம் படைத்திருக்கிறார்.


'“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. 


புதிய பட வெளியீடுகளால் ஜவானின் வசூல்  பாதிக்கப்படவேயில்லை, மேலும் நான்காவது வாரத்தில் கூட ரசிகர்கள் கூட்டமாக படத்தை ரசிக்கிறார்கள் மற்றும் அதைப் பாராட்டுகிறார்கள் என்பது இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும்.

சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் "ஒன் 2 ஒன்" படத்தின் ஃபர்ஸ்ட்

 சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் "ஒன் 2 ஒன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!



"ஒன் 2 ஒன்"  படத்தின்  பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!


24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C  நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.


மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பெரும் ஆவலை தூண்டுகிறது.  ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கமர்ஷியல் விருந்துள்ளது என்பதை ஃபர்ஸ்ட் லுக்   உறுதிப்படுத்துகிறது.


ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார். அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் அட்டகாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.


நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தைத் தொடர்ந்து இயக்குநர் K.திருஞானம், விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.


இப்படத்தில் சுந்தர்.C நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் இணைந்து  நடிக்கின்றனர்.


இப்படத்திற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபின் அட்டகாசமான நான்கு பாடல்களை இசையமைத்துள்ளார். முன்னதாக இவரின் இசையில் பிரமித்து, புத்தம் புதிய ஐஃபோன்  வழங்கி அவரைப் படக்குழு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



தொழில் நுட்பக் குழு விபரம்


தயாரிப்பு - 24 HRS புரொடக்‌ஷன்ஸ்

எழுத்து இயக்கம் - K.திருஞானம்

இசை - சித்தார்த் விபின்

ஒளிப்பதிவு - S KA பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன்

எடிட்டிங் - C S பிரேம் குமார்

கலை இயக்கம் - R ஜனார்த்தனன்

பாடல்கள் - மோகன் ராஜன்

சண்டைப்பயிற்சி - சிறுத்தை கணேஷ் , ரக்கர் ராம்

நடனம் - தீனா

லைன் புரடியூசர் - K கேசவன்

சவுண்ட் & மிக்ஸிங் - T உதயகுமார்

ஸ்டில்ஸ் - V பாக்யராஜ்

D I - ஶ்ரீ கலாசா ஸ்டூடியோஸ்

கலரிஸ்ட் -  ரகுராமன்

விஷுவல் எஃபெக்ட்ஸ் & சிஜி - டி நோட் ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு - சதீஷ், சிவா (AIM)

பப்ளிசிட்டி டிசைன் - தினேஷ் அசோக்

Lyca Productions Subaskaran steps into Mollywood with a blockbuster

 *Lyca Productions Subaskaran steps into Mollywood with a blockbuster franchise*



*Malayalam Superstar Mohanlal 'L2E: Empuraan' directed by Prithviraj Sukumaran*


*L2E: Empuraan getting materialised in grandeur* 


Here’s the time to witness the first-of-its-kind grandest Malayalam project as Aashirvad Cinemas Antony Perumbavur in association with Lyca Productions Subaskaran are jointly producing 'L2E: Empuraan'. The makers are happy to be officially make this announcement. 


‘Lucifer’ starring Mohanlal alongside many famous actors like Tovino Thomas, Manju Warrier, and Prithviraj Sukumaran, who directed the film as well witnessed a phenomenal success both commercially and critically. This in turn increased the expectations of the film’s second part that was announced earlier. 


And now, Lyca Productions, one of the leading production houses of Indian film industry along with Malayalam industry’s top league production house - Aashirvad Cinemas, together are producing the film 'L2E: Empuraan', which is the second part of Lucifer. 


G.K.M. Tamil Kumaran is the Head of Lyca Productions, Murali Gopi is penning screenplay for this film, which has Sujith Vasudev handling cinematography, and Deepak Dev composing music. Suresh Balaji and George Pious are the executive producers of this movie. The film is produced in Malayalam, Tamil, Telugu, Kannada and Hindi. 

 

The fans are excited about the official announcement of 'L2E: Empuraan', especially for the fantabulous collaboration of Aashirvad Cinemas Antony Perumbavur-Lyca Productions Subaskaran-Mohanlal and Prithviraj Sukumaran.


https://youtu.be/bY3vTgSwf3k

மிகப்பிரம்மாண்டமான திரைப்படம் மூலம் மலையாள திரைஉலகில் அடியெடுத்து

 *மிகப்பிரம்மாண்டமான திரைப்படம் மூலம் மலையாள திரைஉலகில்  அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் “லைக்கா நிறுவனம்”*



*மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் 'எம்புரான்' (லூசிபர் 2)*


*பிரம்மாண்டமான பொருட்செலவில் 'எம்புரான்'*


மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் பொருட் செலவில் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் ஆகியோர் இணைந்து 'எம்புரான்' எனும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.


மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'லூசிபர்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருந்தது.


இந்நிலையில் இந்திய திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம்- மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத  வகையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ' எம்புரான் ' எனும் புதிய திரைப்படத்தை மலையாள திரையுலகின் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. 'எம்புரான்' என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 


ஜி.கே.எம் தமிழ் குமரன் லைக்காவின் தலைமை பொறுப்பு வகிக்க இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.

சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.


ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் - லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் - மோகன் லால் ‌- பிருத்விராஜ் சுகுமாறன் என முன்னணி திரை ஆளுமைகளின் கூட்டணியில் தயாராகும் 'எம்புரான்' திரைப்படத்திற்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


https://youtu.be/bY3vTgSwf3k

Sunday, 1 October 2023

Power Star Pawan Kalyan, Harish Shankar, Mythri Movie Makers Ustaad Bhagat Singh

 *Power Star Pawan Kalyan, Harish Shankar, Mythri Movie Makers Ustaad Bhagat Singh Intense Shooting Schedule Wrapped Up*




The power-packed massive actioner Ustaad Bhagat Singh in the deadly combination of Pawan Kalyan and Harish Shankar concluded an intense and action-packed schedule with an exploding performance of the Power Star. The makers have announced to come up with exciting updates in the coming days. The team is jubilant with the way the works are happening.


Ustaad Bhagat Singh is making a huge buzz, not just because the last film Gabbar Singh in their combination was a sensational hit, the glimpse of the movie received a thumping response from all corners. More importantly, Pawan Kalyan is back in action as a cop.


Tollywood's leading production house Mythri Movie Makers is bankrolling the project ambitiously. Naveen Yerneni and Y Ravi Shankar are the producers of this high budget entertainer featuring the most happening Sreeleela playing the lead actress.


Rockstar Devi Sri Prasad provides the music for the movie that has cinematography by Ayananka Bose. Ram-Lakshman duo is taking care of stunts of the movie edited by Chota K Prasad.


Cast: Pawan Kalyan, Sreeleela, Ashutosh Rana, Nawab Shah, KGF fame Avinash, Gauthami, Narra Srinu, Naga Mahesh, and Temper Vamsi


Technical Crew:

Written & Directed by Harish Shankar. S

Producers: Naveen Yerneni, Y.Ravi Shankar

Banner: Mythri Movie Makers

CEO: Cherry

Screenplay: K Dasaradh

Music: Devi Sri Prasad

DOP: Ayananka Bose

Editor: Chota K prasad

Additional writer: C. Chandramohan

Production Designer: Anand Sai

Fights: Ram - Laxman

Executive producers: Chandra Sekhar Ravipati, Harish Pai

PRO: Yuvraaj

Marketing: First Show

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்திலிருந்து, தாய்-மகன்

 *மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்திலிருந்து, தாய்-மகன் பிணைப்பை எடுத்துக்காட்டும்,'ஆராராரி ராரோ' இசை வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது!*



ஜவான் திரைப்படத்தின் மிகவும்  எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'ஆராராரி ராரோ' இசை வீடியோ இறுதியாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில், விவேக்கின் இதயப்பூர்வமான வரிகளில், இந்த பாடல் தாய்-மகன் பாசத்தின் அழுத்தமான சித்தரிப்புடன் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. தீப்தி சுரேஷின் அழகான குரலில் இந்த வீடியோ, தீபிகா படுகோன் மற்றும் இளம் ஆசாத் ஆகியோரின் அற்புதமான சித்தரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறது. 


'ஆராராரி ராரோ' வெறும் பாடல் அல்ல; இது ஒரு தாய் மற்றும் அவரது மகனுக்கு இடையே இருக்கும் ஒப்பற்ற பாசத்தின் கதை,  நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாடு. இந்த மியூசிக் வீடியோ இந்த புனிதமான உறவினை அதனுடன் வரும் தியாகங்கள் மற்றும் உணர்ச்சிகளை, ஆழமாக காட்சிப்படுத்தியுள்ளது. தீபிகா படுகோன், அர்ப்பணிப்புள்ள தாயின் பாத்திரத்தை தன் அசாத்திய நடிப்பில், திரையில் உயிர்ப்பித்துள்ளார். மியூசிக் வீடியோவில் தீபிகா படுகோன்  பார்வையாளர்களிடம் பெரும் மாற்றத்தை கொண்டு வருகிறார் அவரது தோற்றம், அவரின் பாதிப்பு அதைத்தாண்டிய அவரது மன வலிமை, அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் நம்பகத்தன்மையை சேர்க்கிறது. இந்தப்பாடல் உலகம் முழுதும் ரசிக நெஞ்சங்களை கொள்ளை கொண்டு வருகிறது. 


“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

The highly anticipated music video for 'Aararaari Raaro' strikes a chord with

 *The highly anticipated music video for 'Aararaari Raaro' strikes a chord with fans, highlighting the unbreakable mother-son bond!*



The music video for 'Aararaari Raaro', a song from the film Jawan, has finally graced screens worldwide. Composed by the renowned Anirudh Ravichander and featuring heartfelt lyrics by Vivek, the song has captured the hearts of fans with its compelling portrayal of a mother-son love story. Vocalized beautifully by Deepthi Suresh, the video is making waves for its stunning depiction of Deepika Padukone and young Azad, particularly in the evocative jail scene.


'Aararaari Raaro' is not just a song; it's a poignant narrative of unconditional love between a mother and her son. The music video delves deep into the complexities of this sacred bond, showcasing the sacrifices and emotions that come with it. Deepika Padukone, essaying the role of the devoted mother, brings a raw and powerful intensity to the screen, making it impossible not to empathize with her character's journey. Deepika Padukone's transformation in the music video has left audiences spellbound. Her striking appearance, a perfect blend of vulnerability and strength, adds a layer of authenticity to her character.


'Jawan' is a Red Chillies Entertainment presentation directed by Atlee, produced by Gauri Khan, and co-produced by Gaurav Verma. The film was released worldwide in theatres on September 7th, 2023, in Hindi, Tamil, and Telugu.

ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (ஜிடோ) வழங்கும்

 ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (ஜிடோ) வழங்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் ஆரோக்கிய வர்த்தக கண்காட்சியான ‘JITOFOOD AND WELLNESS STORY’-ஐ சென்னையில் நடத்த உள்ளது. இந்த நிகழ்வு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1, 2023




 அன்று சென்னை  ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெறுகிறது!ஜிடோ சர்வதேச வர்த்தக அமைப்பு (JITO) முக்கியமான ஒரு உலகளாவிய சங்கமாக உள்ளது. இது 15,000 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஜெயின் வணிகர்கள், தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள், சிந்தனைத் தலைவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் என பலதரப்பட்ட முக்கிய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஜிடோவுக்குள், ஜிடோ லேடீஸ் விங் ஒரு தன்னிறைவுப் பெற்ற பிரிவாக இயங்கி வருகிறது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உலக அளவில் பெண் தொழில் முனைவோரை வளர்ப்பதில் ஆர்வத்துடன் உறுதி பூண்டுள்ளது.‘ஃபுட் அண்ட் வெல்னஸ் ஸ்டோரி’ அவர்களின் சமீபத்திய முயற்சி. இது சென்னையின் முதன்மையான உணவு வர்த்தக கண்காட்சியாக நிச்சயம் மாறும். புதுமை, பன்முகத்தன்மை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைப் போற்றும் வகையில், இந்த நிகழ்வு உணவுத் துறையின் ஒரு முக்கிய மையமாக செயல்படும். உணவு மற்றும் ஊட்டச்சத்து உற்பத்தி, சந்தைப்படுத்துதல், விநியோகம் மற்றும் சில்லறை வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு இணையற்ற தளத்தை வழங்குவதே அவர்களின் நோக்கம். இந்த கண்காட்சியில்   காட்சிப்படுத்தப்பட உள்ள உணவு தொடர்பான தொழில்நுட்பம், இயந்திரங்கள்  மற்றும் புதுமைகளின் அதிநவீனத்தைக் காண தயாராகுங்கள்.இந்த நிகழ்வின் விருந்தினர்கள் பட்டியலில் புகழ்பெற்ற அரசியல்வாதிகள், புகழ்பெற்ற பிரபலங்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், திறமையான பேச்சாளர்கள், தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மதிப்புள்ள நபர்கள், உயர்மட்ட சமையல் கலைஞர்கள் மற்றும் தேசம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற பிரபல மாஸ்டர் செஃப்களும் இங்கு வர உள்ளனர். இந்த கண்காட்சிக்கு 10,000மேற்பட்ட பார்வையாளர்கள் என்று எதிர்பார்க்க படுகிறது இந்த கண்காட்சியில் இருந்து கிடைக்கும் வருமானம் பெண் தொழில் முனைவோரின் திறன்களை மேம்படுத்துவதற்கும், வீட்டிலிருந்து தொழில் முனைவோர் அல்லது சிறிய அளவில் பிசினஸ் தொடங்கும் பெண்களுக்கு வட்டியில்லா  மூலதனத்தை வழங்குவதற்கும் ஒதுக்கப்படும்.