Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Monday, 2 October 2023

சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் "ஒன் 2 ஒன்" படத்தின் ஃபர்ஸ்ட்

 சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் "ஒன் 2 ஒன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!



"ஒன் 2 ஒன்"  படத்தின்  பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!


24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C  நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.


மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பெரும் ஆவலை தூண்டுகிறது.  ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கமர்ஷியல் விருந்துள்ளது என்பதை ஃபர்ஸ்ட் லுக்   உறுதிப்படுத்துகிறது.


ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார். அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் அட்டகாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.


நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தைத் தொடர்ந்து இயக்குநர் K.திருஞானம், விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.


இப்படத்தில் சுந்தர்.C நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் இணைந்து  நடிக்கின்றனர்.


இப்படத்திற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபின் அட்டகாசமான நான்கு பாடல்களை இசையமைத்துள்ளார். முன்னதாக இவரின் இசையில் பிரமித்து, புத்தம் புதிய ஐஃபோன்  வழங்கி அவரைப் படக்குழு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



தொழில் நுட்பக் குழு விபரம்


தயாரிப்பு - 24 HRS புரொடக்‌ஷன்ஸ்

எழுத்து இயக்கம் - K.திருஞானம்

இசை - சித்தார்த் விபின்

ஒளிப்பதிவு - S KA பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன்

எடிட்டிங் - C S பிரேம் குமார்

கலை இயக்கம் - R ஜனார்த்தனன்

பாடல்கள் - மோகன் ராஜன்

சண்டைப்பயிற்சி - சிறுத்தை கணேஷ் , ரக்கர் ராம்

நடனம் - தீனா

லைன் புரடியூசர் - K கேசவன்

சவுண்ட் & மிக்ஸிங் - T உதயகுமார்

ஸ்டில்ஸ் - V பாக்யராஜ்

D I - ஶ்ரீ கலாசா ஸ்டூடியோஸ்

கலரிஸ்ட் -  ரகுராமன்

விஷுவல் எஃபெக்ட்ஸ் & சிஜி - டி நோட் ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு - சதீஷ், சிவா (AIM)

பப்ளிசிட்டி டிசைன் - தினேஷ் அசோக்

No comments:

Post a Comment