Featured post

THE CREATOR Movie Review

THE CREATOR Movie Review  Hai, Hello friends, இப்போ நம்ம பாக்க போறது ஒரு பிரம்மிப்பான action thriller movie 'THE CREATOR", ஓட revie...

Tuesday, 25 December 2018

எழுத்தார் இமயம் அவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான இயல் விருது

எழுத்தார் இமயம் அவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான ''இயல் விருது "

கனடாவில் இயங்கிவரும் ''தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை'' சார்பாக ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாக இயங்கிவரும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில், ''இயல் விருது'' வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதி ஆணவக்கொலையைப் பற்றிய பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று.

பெத்தவன் நெடுங்கதை தான்,இயக்குனர் மு.களஞ்சியம் தயாரிப்பு , இயக்கத்தில்,புதுமுகங்களோடு, இயக்குனர் சீமான் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ''முந்திரிக்காடு'' திரைப்படமாக  உருவாகி இருக்கிறது.

ஆகவே,

எழுத்தார் இமயம் அவர்களுக்கு  2018-ம் ஆண்டுக்கான ''இயல் விருது''அறிவிக்கப்பட்டதில் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்











No comments:

Post a Comment