Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Friday, 7 December 2018

விஷாலின் படப்பிடிப்பு ரத்து

                                                              அயோக்யா" படப்பிடிப்பு ரத்து

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடில் விஷாலின் "அயோக்யா" படப்பிடிப்பு ரத்து! 
பல லட்சங்கள் நஷ்டம்..

லைட் ஹவுஸ் மூவி மேக்கேர்ஸ் B. மது  தயாரிப்பில் வெங்கட் மோகன்
இயக்கத்தில் விஷால் நடிக்கும் "அயோக்யா" படத்தின் படப்பிடிப்பு நேற்று
விழுப்புரம் மவட்டத்திலுள்ள கூனிமேடு  மசூதி அருகே நடைபெற இருந்தது.
அதற்க்கான அனுமதியும் படக்குழுவினர் முறையாக முன்னமே பெற்று
வைத்திருந்தனர். அனால் நேற்று பாபரி மசூதி இடிக்கபட்ட நினைவு நாள்
ஆகையால் அசம்பாவிதம் ஏதும் நடக்க கூடாது என்று கருதி காவல்
துறையினர் அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லை.  விஷால்
மற்றும் கதாநாயகி ராஷி கன்னா, K.S.ரவிகுமார் மற்றும் பிற நடிகர் நடிகைகளும் 
 படப்பிடிப்பில் கலந்து கொள்ள அங்கு வந்தனர் . அனால் பட குழுவினர்
படப்பிடிப்பு   நடத்த முடியாமல் திரும்பி சென்றனர். நேற்று
படப்பிடிப்பு ரத்து செய்த காரணத்தால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் ரூபாய் 
நஷ்டமாகியுள்ளதாக  தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment