Saturday, 30 November 2019

புதையலை தேடும் திகில் மற்றும் நகைச்சுவை படம் டம்மி ஜோக்கர்

இரட்டை இயக்குனர்கள் அறிமுகம்

ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் சார்பில்
கதையின் நாயகனாக நடித்து "டம்மி ஜோக்கர் " என்ற திகில் மற்றும் நகைச்சுவை படத்தை தயாரித்துள்ளார் செந்தில்குமார்.

மேலும் இதில் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி , தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர்.


ஆலன் பிரகாஷ் இசையையும், திருப்பதி ஆர்.சாமி ஒளிப்பதிவையும், ஜி.வேணுகோபால், ராஜா இருவரும் பாடல்களையும், ராம் படத்தொகுப்பையும், ஜாய் மதி நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர்.


வினோ நாகராஜன் இதன் கதை எழுதி, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி உள்ளார்  ரேடியண்ட் விஷ்வல்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில்குமார் தயாரிக்கிறார்.


தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிவாஜி கணேசன் நடித்த "பராசக்தி " படத்தை இயக்கிய கிருஷ்ணன் - பஞ்சு,
வெள்ளி விழா கொண்டாடிய "அன்னக்கிளி " படத்தை இயக்கிய
தேவராஜ் - மோகன்
நூறு நாட்கள் ஓடிய " பன்னீர் புஷ்பங்கள் " படத்தை இயக்கிய பாரதி - வாசு
"உல்லாசம் "படத்தை இயக்கிய கேடி - ஜெர்ரி , " விக்ரம் வேதா " படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி
வரிசையில்   இரட்டை இயக்குனர்களாக வினோநாகராஜன் _ என்.கல்யாணசுந்தரம் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்கள்.

 
படத்தை பற்றி இயக்குனர்கள் இருவரும்," 22 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தந்தையை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறான். அவனுக்கு அந்த ஊரில் கதாநாயகனும் நண்பர்களும் உதவி புரிவதாக கூறுகிறார்கள். ஊர் முழுக்க விசாரிக்கையில் பேய் பங்களாவை காட்டுகின்றனர் ஊர் மக்கள். மேலும் அந்த பங்களாவினுள் தங்க புதையல் இருப் பதாகவும் அதனுள் தான் இவன் தந்தை சென்றதாகவும் சொல்கிறார்கள்.

அவனுக்கு அப்பா _
நமக்கு புதையல் என்று கணக்கு பண்ணி அவனுக்கு உதவுவது போல் பங்களாவுக்குள் எல்லோரும் நுழைகின்றனர். இவர்கள் உள்ளே வந்ததும் கதவு மூடிக் கொள்கிறது. எவ்வளவோ முயன்றும் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. அனைவரும் திகிலடைகின்றனர்.
அவன் தந்தையை கண்டுபிடித்தார்களா? புதையல் அவர்களுக்கு கிடைத்ததா? இப்படி செல்லும் கதை ஒரு கட்டத்தில் செம காமெடிக்கு மாறும். முன்னனியில் இருக்கிற பிரபலமான 22 நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் நடிக்க வைத்துள்ளோம். அவர்கள் அடிக்கிற லூட்டி காமெடியின் உச்சகட்டமாக இருக்கும். காரைக்குடியிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் படமாக்கி உள்ளோம்" என்றார்கள் இருவரும் .15 comments:

 1. All the best to success of the film and producers and directors

  ReplyDelete
  Replies
  1. Further relative and friends audience are waiting grand realise ..G.venugopal

   Delete
 2. All the best to success of the film and producers and directors

  ReplyDelete
 3. தங்களது முயற்சியும் உழைப்பும் உங்களுக்கு கை கொடுக்கும்

  ReplyDelete
 4. Thanks for your comments team 2

  ReplyDelete
 5. ALL the best. Padam 100/- days successfulla poga Mana Mara valthukkal

  ReplyDelete
 6. All the best for your future, I'm eagerly waiting for your all efforts on big screen

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் அருமை

  ReplyDelete
 8. All the very best and i am waiting for your big success.

  ReplyDelete
 9. All tHe beSt fOr uR futUre bro have a gReat succEss ✌️

  ReplyDelete