ஷாமின் சமீபத்திய திரையரங்க வெளியீடான ' அஸ்திரம் ' மே 9 அன்று ஆஹா தமிழ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக வெளியான திரைப்படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். அறிமுக எழுத்தாளர் ஜெகன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர், வெண்பா மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் DSM ஆகியோர் நடித்துள்ளார்கள்
இந்த படம் கடந்த மார்ச் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று இருந்தது.
நீங்கள் க்ரைம் த்ரில்லர்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தால், இது உங்களுக்கானது. இறந்தவர்களிடையே காணப்படும் பொதுவான வடிவத்தைக் கொண்ட தொடர்ச்சியான தற்கொலை வழக்குகளை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை சுற்றி அஸ்திரம் நகர்கிறது. தற்கொலைகளில் தவறு நடந்ததாக சந்தேகிக்கும் நாயகன் விசாரணையைத் தொடங்குகிறார், பல விறுவிறுப்பான திசைகளில் பயணித்து சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உறையவைக்கும் உண்மைகளை கண்டுபிடிக்கிறார்.
'அஸ்திரம்' திரைப்படம் நிச்சயம் த்ரில்லர் மற்றும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். திரையரங்குகளில் கானத்தவறியவர்கள் தற்போது Aha Tamil OTT தளத்தில் கண்டுகளிக்கலாம்.
No comments:
Post a Comment