Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Tuesday, 1 December 2020

ட்ரிபிள்ஸ்” மூன்று நண்பர்கள்

“ட்ரிபிள்ஸ்” மூன்று நண்பர்கள்…. ரெண்டு கல்யாணம்…கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்க வருகிறது !

 

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வழங்கும் “ட்ரிபிள்ஸ்”  3 நண்பர்கள், அவர்களது வாழ்க்கை, காதல், மற்றும் அவர்களின் காஃபி ஷாப்பில் நடக்கும் வேடிக்கை கலந்த காமெடி கலாட்டாக்களை சுவாரஸ்யமாக சொல்லும் இணைய தொடர்.


~

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் சாருகேஷ் சேகரால் இயக்கப்பட்டிருக்கும் இத்தொடரில்  ஜெய் , வாணி போஜன்,விவேக் ப்ரசன்னா, மற்றும் ராஜ் குமார் ஆகியோர்  நடித்துள்ளார்கள். துள்ளலான காமெடியில் 8  அத்தியாயமாக வெளிவரும் இந்த தொடரை 

  ‘டிஸ்னி + ~ஹாட்ஸ்டார் விஐபி தளம் ப்ரத்யேகமாக வழங்குகிறது.  வரும் டிசம்பர் 11, 2020 ல் வெளியாகும் இத்தொடரை உங்கள்  டிஸ்னி + ~ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் காணத் தவறாதீர்கள்~ இதன் டிரெய்லர் உங்கள் பார்வைக்கு



சென்னை, நவம்பர் 30, 2020:

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், பென்ஞ் ஸ்டோன்  ஃபிலிம்ஸுடன் இணைந்து வெளியிடவுள்ள முதல் தமிழ் தொடர்  “ட்ரிபிள்ஸ்”.

Click here to view video :

https://youtu.be/Wb8hqSBMojk

ராம், மாது மற்றும் சீனு ஆகிய மூன்று நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிலிருந்து அவர்கள் வெளிவருவதை சுவாரசியமாக விவரிக்கும்  கதை தான் இது. தொழிலில் பங்குதாரர்களாகவும் இணைபிரியா நண்பர்களாகவும் இருக்கும் மூன்று பேருடைய வாழ்வில்  நடக்கும் குழப்பங்களே இதன் கதை. திருமணத்தில் ஏற்பட்ட ஒரு குழப்பத்திலிருந்து தப்பித்து தங்களை தாங்களே கண்டறிவதற்காக கோவாவிற்கு செல்லும் நண்பர்களை, ஒரு  கடன் முதலை துரத்த, அதை தொடர்ந்து நடக்கும் களேபரங்கள் 8-பகுதிகளாக சொல்லப்பட்டுள்ளது.


இந்த காதல்-காமெடித் தொடரில், வாணி போஜன் மற்றும் சிறப்பான நடிப்பு திறன் கொண்ட விவேக் ப்ரசன்னா, ராஜ்குமார், மாதுரி எம்ஜே, சம்பத், ஆகியோருடன் தமிழ் சினிமாவின் இளம்  நட்சத்திரமான   ஜெய், முதன்முதலாக டிஜிட்டலில் அறிமுகமாகிறார். கார்த்திக் சுப்புராஜால் தயாரிக்கப்பட்டு சாருகேஷ் சேகரின் இயக்கத்தில் வெளிவரும் இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின், “ட்ரிபிள்ஸ்” டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது.

 

நடிகர் ஜெய் இத்தொடர் குறித்து கூறியுள்ளது...  “ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின் புத்தம்புதிய தொடரான  “ட்ரிபிள்ஸ்”, மூன்று இணைபிரியா நண்பர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சமுடன் விவரிக்கும் கதை. இதனை உருவாக்கியவர்கள் இதன் திரைக்கதையில் கவனம் செலுத்தி,  நகைச்சுவை மேதை க்ரேஸி மோகனின் காமெடி நடை போன்று, அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தும் நகைச்சுவையுடன் இதனை வழங்கியுள்ளனர். அனைவருக்கும் தங்களின் நெருங்கிய நண்பர் கூட்டத்தை நினைவுபடுத்தும்படி அமைந்துள்ள ” ட்ரிபிள்ஸ்” பரபரப்பாக நகரும் வேடிக்கை நிரம்பிய காமெடி கதை. நிச்சயமாக இது என் வாழ்வின் பழைய நினைவுகளை கிளறியது!” உங்கள் வாழ்வையும் ஞாபகப்படுத்தும் என்று கூறினார்.


மேலும் நடிகை வாணி போஜன், “ட்ரிபிள்ஸ்” 3 நண்பர்களை இணைக்கும் அதே சமயம், ஒரு முக்கோண காதலையும், ஒரு கடன் முதலையையும் திரைக்கதைக்குள் அழகாக பொருத்தி, காமெடியாக சொல்லியிருக்கும் சிறந்த கதை. முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை ட்ராமா, நகைச்சுவை மற்றும் பரபர கலாட்டாக்கள் நிறைந்த இத்தொடர், பார்ப்பவர்களின் மனதில் நிச்சயம் புன்னகை வரவழைக்கும். பெரும்  திறமை வாய்ந்த  படகுழுவினருடன் இத்தொடரில் பணிபுரிந்தது  மிக்க மகிழ்ச்சி. இதை உருவாக்குவதில் ஏற்பட்ட சந்தோஷத்தை போலவே இதைப் பார்ப்பவர்களும் மிக்க மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

 

தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ், ”ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மனதுக்கு மிகவும் பிடித்த பல தொடர்களை உருவாக்கியுள்ளது. நாங்கள் இந்த தளத்தின் முதல் தமிழ் தொடரான  “ட்ரிபிள்ஸ்”. தொடரை இதில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். மனம் மகிழ வைக்கும் இந்த முழு நீள நகைச்சுவைத் தொடரில், என் மனத்துக்கு நெருக்கமான தமிழ் பார்வையாளர்கள் தங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் தங்கள் வாழ்வில் தொடர்புப் படுத்தக் கூடிய சில பாத்திரங்களைப் பார்க்கலாம். இத்தொடரின் வேடிக்கையான வசனங்கள் ரசிகர்கள் அனைவரையும் கடைசி வரை சிரிப்பில் ஆழ்த்தும்” என்று கூறினார்.

 


கதை சுருக்கம்:

இரண்டாவது முறையாக, திருமணத்திற்கு தயாராகி வரும், ராம் சரியான முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறான். அப்போது, அவனது நெருங்கிய நண்பர்களான மாது மற்றும் சீனு அவனை உற்சாகப்படுத்த முயற்சி செய்கின்றனர். இந்த சமயத்தில் திருமண கூடத்தில் அவனது முதல் மனைவி மீரா உள்ளே நுழைவதால், திடீர் திருப்பம் ஏற்படுகிறது. குழப்பமான இந்தச் சூழ்நிலையில் நண்பர்கள், அனைவருக்கும் ஏற்ற சரியான முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்; ஆனால், கதையில் மற்றொரு திருப்பமாக, இந்த மூவரின் காஃபி ஷாப் நடத்தும் நீண்ட நாள் கனவு சிம்ம சொப்பனமாகி அவர்களை மறக்க முடியாத ஒரு கோவா பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது!


வரும் டிசம்பர் 11, 2020 முதல் டிஸ்னி + ஹாட் ஸ்டார் விஐபியில்  “ட்ரிபிள்ஸ்” தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் தவறாமல் பாருங்கள்

 

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வழங்கும் “ட்ரிபிள்ஸ்”, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் வெளிவரவுள்ள ஆர்வமூட்டும் தமிழ்த் தொடர்களின் வரிசையில் ஒன்றாகும். சமீபத்தில் வெளியிடப்பட்ட ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “மூக்குத்தி அம்மன்” வெற்றி திரைப்படத்தை  தொடர்ந்து இத்தொடர் தமிழ் ரசிகர்களுக்கென்றே ப்ரத்யேகமாக வெளிவரவுள்ளது. வரவிருக்கும் இத்தொடருடன், இத்தளம் தற்போது தமிழர்களின் சொந்த திரையாக முன்னேறி வருகிறது. கோலிவுட்டை சேர்ந்த  பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை சின்னத் திரைகளுக்குக் கொண்டு வருவதால், இதுவே இன்றைய தமிழ் நாட்டின் புதியத் திரை, உங்க சொந்தத் திரை. டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி உபயோகிப்பாளர்கள், வருடாந்திர சந்தாவுடன், தங்கள் தொலைக்காட்சிகளில் மனதுக்கு பிடித்த பிக் பாஸ் தமிழ் மற்றும் விஜய் டிவியின் பிற பிரபலத் தொடர்களையும் பார்க்கலாம். தியேட்டர்களுக்கு செல்லாமலே, ப்ளாக்பஸ்டர் படங்களை (மூக்குத்தி அம்மன்) மற்றும் உலகின் சிறந்த சூப்பர் ஹீரோ படங்கள் (அவெஞ்சர்ஸ், என்ட் கேம், அயர்ன் மேன்), சமீபத்திய அனிமேஷன் படங்கள் (ஃப்ரோஸன் 2, த லயன் கிங்), குழந்தைகளுக்குப் பிடித்த கேரக்டர்கள் (மிக்கி மவுஸ், டோரேமான் மற்றும் ஏழு மொழிகளில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின் மிகப் பிரபலமான ஸ்பெஷல் ஓப்ஸ், ஆர்யா, ஹோஸ்டேஜஸ் 2, லைவ் ஸ்போர்டிங்க் ஆக்க்ஷன் உட்பட்ட மற்றும் பல வித்தியாசமான கதைகளை வருடத்திற்கு வெறும் ரூபாய் 399/இல் பார்க்கலாம்.

No comments:

Post a Comment