Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Thursday, 31 December 2020

“ உளி “ மற்றும் “ வந்திய தேவன் மீது ஒரு

 “ உளி “ மற்றும் “ வந்திய தேவன் மீது ஒரு பி.சி.ஆர்  வழக்கு “ என்ற இரண்டு படங்களை தயாரிக்கிறார்  G.முருகானந்தம்




ஜனவரி 21 ம் தேதி வெளியாகிறது “ஆண்கள் ஜாக்கிரதை"

தயாரிப்பாளர் G.முருகானந்தம் தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில்  மரப்பாச்சி என்ற திகில் படத்தை தயாரித்தது மட்டுமல்லாது திருப்பதிசாமி குடும்பம், ஆண்கள் ஜாக்கிரதை போன்ற படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அவர் தற்போது தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் “ ஆண்கள் ஜாக்கிரதை “ படத்தை வருகிற ஜனவரி 21 ம் தேதி தமிழகமெங்கு வெளியிடுகிறார்.


“ ஆண்கள் ஜாக்கிரதை “ இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் அந்த சமுதாயமே அழியும் என்ற கருத்தை சொல்கிறோம்.


இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது.


இதை தொடர்ந்து தயாரிப்பாளர் G.முருகானந்தம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட “ உளி “ என்ற படத்தை தயாரித்து இயக்கவிருக்கிறார். இன்னொரு படத்தை சோனியா அகர்வால் நடித்த  “ஒரு நடிககையின் வாக்குமூலம் “ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய ராஜ்கிருஷ்ணா இயக்கவுள்ளார் அந்த படத்திற்கு “ வந்திய தேவன் மீது ஒரு பி.சி.ஆர் வழக்கு “ என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது.


No comments:

Post a Comment