Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Wednesday, 30 December 2020

வயதில் தொடங்கிய இசைப் பயணம்

 8 வயதில் தொடங்கிய இசைப் பயணம்! - ’பேராசை’ இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ் நெகிழ்ச்சி

இசைத் துறையில் மிகப்பெரிய அனுபவம் பெற்ற பலர் தங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டாமல் பயணிப்பதுண்டு. அப்படி 

ஒருவர் தான் வி.ஆர்.ராஜேஷ் (எ) சுதர்சன். தனது 8 வயதில் தனது இசைப் பயணத்தை தொடங்கிய இவர், இன்னும் அதில் 

வெற்றிக்கரமாக பயணித்துக் கொண்டிருப்பதோடு, பல புதிய பாடகர்கள், பாடகிகளை இசையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.







இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகனும், ’யாரடி நீ மோகினி’ சீரியல் ஹீரோவுமான ஸ்ரீ நடிக்கும் ‘பேராசை’ படத்திற்கு 

இசையமைத்து வரும் வி.ஆர்.ராஜேஷ், தனது இளம் வயது முதலே இசைத்துறையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு 

வந்திருக்கிறார்.


1000 திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் கலைமாமணி சங்கர் கணேஷிடம் இசை உதவியாளராக சுமார் 15 வருடங்களாக பணியாற்றியிருக்கும் வி.ஆர்.ராஜேஷ், பல குறும்படங்களுக்கு இசையமைத்ததோடு, சுமார் 100-க்கும் மேற்பட்ட தனிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். அப்பாடல்கள் யூடியூப் இணையத்தில் பல லட்சம் ரசிகர்களை கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


24 மணி நேரம் தொடர்ச்சியாக கித்தார் இசைக்கருவி வாசித்து சாதனை நிகழ்த்திய வி.ஆர்.ராஜேஷ், ஆல் இந்தியா ரேடியோவில் இசை 

நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இப்படி இசைத் துறையில் பலமான அனுபவம் கொண்ட வி.ஆர்.ராஜேஷின் இசையில் உருவாகும் 

‘பேராசை’ படத்தின் பாடல்களை லோகேஷ், மெர்லின் காஞ்சனா, பிரியா பாலாஜி, புவனா ஸ்ரீ ஆகியோர் பாடியுள்ளனர்.


ஈசன் மூவிஸ் சார்பில் கேசவன், சரவணன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகும் ‘பேராசை’ படம் விரைவில் வெளியாக உள்ளது.


இசைத்துறையில் பல்வேறு சாதனைகளையும், புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வந்த வி.ஆர்.ராஜேஷ், ‘பேராசை’ படத்தின் 

ரிலீஸிற்கு பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பார், என்று படக்குழுவினர் நம்பிக்கை 

தெரிவித்துள்ளது.


8 வயது முதல் இசைத் துறையில் ஈடுபட்டு வரும் வி.ஆர்.ராஜேஷ், தனது இசைப் பயணம் நீண்டதொரு வெற்றிப் பயணமாக அமைந்து, 

தற்போது தொடர்வதை எண்ணி நெகிழ்ச்சியடைந்திருப்பதோடு, தனது ‘பேராசை’ பட பாடல்களை கேட்டவர்கள் அவரை வெகுவாக 

பாராட்டியதால் மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறார்.


இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷின் தாயார் வசந்தா ராமகிருஷ்ணன் பிரபல பக்தி பாடகர் வீரமணி அவர்களின் இசைக்குழுவில் 

பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment