Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Thursday, 31 December 2020

வேலம்மாள் பள்ளியில் மற்றொரு புதிய கிராண்ட்மாஸ்டர்

 வேலம்மாள் பள்ளியில் மற்றொரு புதிய கிராண்ட்மாஸ்டர்   உதயமானார்.


  வேலம்மாள் வித்யாலயா மேல் அயனம்பாக்கம் பள்ளியின் 9 ஆம் வகுப்பு

மாணவன் லியோன் மென்டோன்கா,

 2020 டிசம்பர் 26 முதல் 2020 டிசம்பர் 30 வரை இத்தாலியில் நடைபெற்ற 5 வது சர்வதேச  வெர்கானி கோப்பை செஸ் விழாவில் கலந்து கொண்டு   2020 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி உலகின் 29 வது இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையைத்  தனது 14 வயதில்  வென்றுள்ளார்.

 

இதன் மூலம், மாஸ்டர் லியோன் மென்டோன்கா 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் சதுரங்கப் புகழை உலகளவிற்கு  உயர்த்திய இந்தியாவின் 67 வது கிராண்ட் மாஸ்டராக உருவாகியுள்ளார். இதுவரை   வேலம்மாள் பள்ளி உருவாக்கியுள்ள 12 கிராண்ட்மாஸ்டர்களில் இருவர் பெண்கள்

என்பது குறிப்பிடத்தக்கது ம்  சாதனைக்குரியதும் ஆகும்.

வேலம்மாள் பள்ளி நிர்வாகம் லியோனின் அசாதாரண சாதனைக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத்  தெரிவித்து, அடுத்த ஆண்டுகளில் மிகவும் வெற்றிகரமான சதுரங்க வாழ்க்கையைத் தொடர வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment