Featured post

Next big leap by Producer Bazaar: Producer Bazaar to co-host India Joy 2025, India’s leading

 Next big leap by Producer Bazaar: Producer Bazaar to co-host India Joy 2025, India’s leading entertainment technology industry event, in pa...

Wednesday, 30 December 2020

அருண் விஜய் உடைய “சினம்” படத்தின்

 அருண் விஜய் உடைய  “சினம்” படத்தின் புத்தம் புதிய போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தை GNR குமரவேலன் இயக்கியுள்ளார் Movie Slides Pvt ltd சார்பில் R.விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். 2021 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் உலகளவில் படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், முன்னதாக உலகம் முழுக்க  பல்வேறு திரைப்பட விழாக்களில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. தற்போது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் சிறப்பு பதிப்பை படத்தொகுப்பு செய்து வரும் குழு தீவிரமாக தயாரித்து வருகிறது. 


இது குறித்து நடிகர் அருண் விஜய் கூறியதாவது...

“சினம்” படத்தின் கரு உலகளவில்  அனைத்து ரசிகர்களையும் கவரும் தன்மை கொண்டது. அதனால் உலக ரசிகர்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட நினைத்தோம். படத்தில் ஆக்‌சனும், உணர்வுகளும் சரிபாதியாக கலந்திருக்கும்.  அது ரசிகர்களை படமுழுக்க பரபரவென வைத்திருக்குமென நான் நம்புகிறேன். இப்படத்தை 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். 


நடிகர் அருண்விஜய் ஏற்கனவே இயக்குநர் நவீன் இயக்கத்தில் “அக்னி சிறகுகள்” படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். மேலும் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் AV31 படமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கு பிறகு உடனடியாக இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 



அருண் விஜய் இப்படத்தில் பாரி வெங்கட் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். பாலக் லால்வானி அவரது மனைவியாகவும் தேஷினி அவர்களது மகளாகவும் நடிக்கிறார்கள். சபீர் இப்படத்திற்கு இசையமைக்க சில்வா சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.

No comments:

Post a Comment