Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Thursday, 31 December 2020

எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல”

 எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகை ப்ரியா பவானி சங்கர் ! 



எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் நாயகியாக இணைந்திருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட படத்தின் தலைப்பு பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ப்ரியா பவானி சங்கர் படத்தில் இணைந்திருக்கும் அறிவிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 


இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா கூறியதாவது...

நடிகை ப்ரியா பவானி சங்கர் ஏற்கவுள்ள கதாப்பாத்திரம் சிறியளவிலான பாத்திரம் அல்ல, கதையில் மிகவும் முக்கியமான பாத்திரம். அவர் கௌதம் கார்த்திக் கதப்பாத்திரத்தின் ஜோடியாக நடிக்கிறார். அவர் ஒரு தாசில்தாராக வருகிறார். அவரது பாத்திரத்திற்கான தனித்தன்மை படத்தில் உள்ளது. கதையின் போக்கோடு ஓடிவிடாமல் ரசிகர்கள் ரசிக்கும்படி அவரது கதாப்பாத்திரம் இருக்கும். மார்ச் மாதம் 2021 ல் படத்தின் படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவை தேர்ந்தெடுப்பதில் படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது. பணியாற்றவுள்ள முழுமையான குழுவின் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்க, “சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை” படப்புகழ் இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.

No comments:

Post a Comment