Featured post

Fire Movie Review

Fire Movie Review ஹாய் மக்களே இன்னைக்கு நம்ம  ஃபயர் படத்தோட ரிவ்யூ பாக்க போறோம். இந்த படத்தை  ஜே எஸ் கே சதீஷ்குமார் இயக்கி இருக்காரு. பெப்ரவ...

Thursday, 24 December 2020

முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் டிஜிட்டல் மார்கழி உத்சவ் 2020

 முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் டிஜிட்டல்  மார்கழி உத்சவ் 2020 நிகழ்வு மிகுந்த வரவேற்புடனும் உற்சாகத்துடனும் தொடங்கியது. 



முகப்பேர் வேலம்மாள்  பள்ளி ஏற்பாடு செய்திருந்த டிஜிட்டல் மார்கழி உத்சவ் 2020 இசை நிகழ்வு வேலம்மாள் நெக்ஸஸ் யூடியூப் சேனலில் மனதை மயக்கும் மந்திர இசையுடன் 2020 டிசம்பர் 23 அன்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

இந்நிகழ்வில் இசைக்கலைஞரும் பின்னணிப் பாடகரும் மற்றும் சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான  தமிழ்நாடு மாநில அரசின் திரைப்பட விருதை இரண்டு முறை
 
 

வென்றவருமாகிய | திருமதி.எஸ். மகதி அவர்களின் ஒரு மணிaநேர இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை இசைப் பரவசத்தில் ஆழ்த்தி அவர்களை இசை  அரங்கிற்கே அழைத்துச் சென்றது.

ஒவ்வொரு இல்லத்திலும் அவரது மெல்லிசையின் சிறகு எதிரொலித்தது.  வசீகரமான  பல பாடல்களுடன் துவங்கிய மார்கழி உத்சவின் முதல் நாள் மாலைப்பொழுது பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தது. இனிவரும் நாட்களில்

பார்வையாளர் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் இன்னும் பல இசை நிகழ்ச்சிகள் எதிர்வரக் காத்திருக்கின்றன.

No comments:

Post a Comment