Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Friday, 4 December 2020

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை

 கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை சிவனுக்கு கோயில் எழுப்ப வேண்டும்.! திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் பேட்டி ;



கன்னியாகுமரி:

பிரபல திரைப்பட இயக்குனரும் ,அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு  மாலை அணிவித்து வணங்கினார் .



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;


லெமூரியா கண்டத்தின் எச்சமாக விளங்கும் கன்னியாகுமரியில் சிவலிங்கம் ஒன்று உள்ளதாக நான் அறிந்தேன் .அதை வணங்கவே இன்று கன்னியாகுமரி வந்தேன். இதை வணங்கும் பாக்கியம் எனக்கு இந்த வயதில்கிடைத்தது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சிவலிங்கம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இங்கு உள்ள சிவலிங்கத்திற்கு பெரிய அளவில் கோயில் கட்ட முதல்வரிடம் கோரிக்கை விடுப்பேன். 



ஆதியும் அந்தமும் இல்லாத சிவன் பிறப்பு இறப்பு அற்றவர் . சினிமா துறையில் ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்தவர் எம்.ஜி.ஆர் பின்னர் அதே துறையில் உச்சம் தொட்ட போது அவமான படுத்தியவர்களை மதிப்பளித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியவர் எம்ஜிஆர்.அப்படிபட்ட எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக கட்சிவரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்  200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.


வரும் தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு சீட்டு கிடைக்க வாய்ப்பு இல்லை .மாறாக மண்ணின் மைந்தர்களுக்கே தலைமை கழகம் வாய்ப்பளிக்கும் .தொகுதிக்கு தொடர்பில்லாதவர்களை மக்களே புறக்கணிப்பார்கள்.புரட்சிதலைவரின்,புரட்சி தலைவியின் எண்ணங்களை,கனவுகளையும் தமிழக முதல்வரும்,துணைமுதல்வரும் நிறைவேற்றி வைப்பார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment