Featured post

Actor- Director K. Bhagyaraj thanks press and media on completing 50 Years in Cinema

 *Actor- Director K. Bhagyaraj thanks press and media on completing  50 Years in Cinema* Celebrated filmmaker and actor K. Bhagyaraj, markin...

Thursday, 31 December 2020

என்னுடைய தமிழ் திரைப்படம் ”தேன்

என்னுடைய தமிழ் திரைப்படம் ”தேன்” கோவாவில் நடைபெறும் 2020-க்கான 51-வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் வெற்றிப் பெற்று இருப்பதோடு, சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியும் இருக்கிறது என்பதை திரைப்படம், அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி, வலைதள ஊடகங்கள் மற்றும் யூடியூப் ஊடகத்தார்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தப் படத்தில் பணிபுரிந்த என் குழுவினர்களுக்கும் இந்தப் படத்தை அங்கீகரித்த 51-வது இந்தியன் பனோரமா 2020 சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குக் குழுவினர்களுக்கும், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த்த் திரைப்படத்திற்கு ஊடகங்கள் கொடுத்த ஆதரவும், விமர்சனங்களும் இந்தத் திரைப்படத்தை பற்றி வெளிவந்த செய்திகளும் என் திரைப்படத்திற்கு பெரும் ஊக்கமாக இருந்தது. .உங்களுடைய ஆதரவையும் பங்களிப்பையும் எண்ணிப் பார்க்கையில் உங்களைப் பாராட்ட வார்த்தைகள் வரவில்லை.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அம்பலவாணன். B, பிரேமா. P (AP PRODUCTIONS), 






படத்தை வெளியிடும் "டிரைடன்ட் ஆர்ட்ஸ்' R.ரவிந்திரன்


கதையின் நாயகன் தருண்குமார், நாயகி அபர்நதி. குழந்தை நட்சத்திரம் அனுஸ்ரீ ,துணை நடிகர்கள் பாவா லெஷ்மணன், அருள்தாஸ், ’கயல்’ தேவராஜ், ஒளிப்பதிவாளர் சுகுமார், இசையமைப்பாளர் சனத் பரத்வாஜ், படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், வசன எழுத்தாளர் ராசி தங்கதுரை, கலை இயக்குனர் மாயப்பாண்டி, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர்கள் இந்தத் திரைப்பட உருவாக்கத்திற்கு கொடுத்த பங்களிப்பிற்கும் ஒத்துழைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



No comments:

Post a Comment