Featured post

Filmmaker Bala’s directorial* *Arun Vijay starrer “Vanangaan

 *Filmmaker Bala’s directorial*   *Arun Vijay starrer “Vanangaan’ First Schedule Shoot wrapped up* The makers of Director Bala’s upcoming fi...

Sunday, 19 December 2021

40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒட்டியம்பாக்கம் அரசன் காலனி

 

40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒட்டியம்பாக்கம் அரசன் காலனி சுற்றியுள்ள ஒரு லட்சம் மக்கள் பயன் பெறும்  வகையில் ஏரியை  புனரமைக்கும் பணிக்காக டாக்டர் சூசன் மார்த்தாண்டன்  முன்னெடுப்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஸ்பாட் லைட்  மற்றும் ரோட்டரி ஸ்பாட்லைட் இன்டர்நேஷனல் பால் இணைந்து டாக்டர் சூசன் மார்த்தாண்டன் முன்னெடுப்பில் 40 ஏக்கர்  நிலப்பரப்பு கொண்ட ஒட்டியம்பாக்கத்திலுள்ள அரசன்காலனி ஏரியை புனரமைக்கும் பணி மற்றும் சர்வதேச திட்டங்களுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி  கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

அரசன்காலனி ஏரியை புனரமைப்பு செய்வதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அப்பகுதியை சுற்றியுள்ள ஒரு லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது









































 

 மேலும்திரட்டப்படும் வருமானம், சென்னையில் உள்ள ஏரியை மறுசீரமைப்பதற்கும், கொலொன்னோவ ரோட்டரி கிளப் கொலம்மபோ சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்கும் நேரடியாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ரோட்டரி சங்கம் தொடர்ந்து ஏழாம் ஆண்டில் இது போன்ற பொதுநல திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது

தற்போதைய காலகட்டத்தில் சுகாதார பணிகளுக்காக அதிக தேவைகள் இருப்பதால் அதனை நிறைவேற்றும் விதமாகவும் ரோட்டரி கிளப் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து நிதி திரட்டும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  ஹக் குரூஸ், ருமேனியாவின் கெளரவ தூதர், ஒலெக் அவ்தீவ்
 கௌரவ தூதரக ஜெனரல் ரஷ்யா, அந்தோனி லோபோ, கௌரவ தூதர் ஜெனரல் ஸ்பெயின், எம்.  சேஷா சாய்                  மெச்சினேனி,  கௌரவ தூதர் செஷல்ஸ்,  கேப்டன் டாக்டர் ஜி ராம்சாமி,  அங்கோலா குடியரசின் கௌரவத் தூதர்,  Rtn Dr.சூசன் மார்த்தாண்டன், தலைவர், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஸ்பாட்லைட்,உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட  பிரபலங்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் புகழ்பெற்ற ரோட்டேரியன்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment