Featured post

Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town

 *Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town* Passi...

Saturday, 25 December 2021

தமிழ் இசை ஆல்பங்களுக்கு தற்போது மிகப்பெரிய

தமிழ் இசை ஆல்பங்களுக்கு தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால், பல இசை ஆல்பங்கள் வெளியாக தொடங்கியிருப்பதோடு, பெரிய பெரிய இசை நிறுவனங்களும் தமிழில் இசை ஆல்பங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், கனடா நாட்டில் வாழும் தமிழரான செந்தில் குமரன் ஒரு நல்ல பாடகர். தனது இசை ஆல்பங்கள் மூலம் உலக தமிழகர்களிடம் பிரபலமாகியுள்ளார். கனடா நாட்டில் மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆலோசககார பணியாற்றி வருகிறார். இசை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக அவர் அங்குள்ள தமிழ் மற்றும் கனடா நாட்டு இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து திரைப்பட பாடல்களுக்கு கவர் பாடல்களை பாடி, சொந்தமாக பல இசை ஆல்பங்களையும் தயாரித்து வீடியோ பதிவு செய்து அப்பாடல்களை தனது Minnal Music YouTube சேனலில் வெளியிட்டு வருகிறார்.
செந்தில் குமரனின் குரலுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் உருவாகி வருவதோடு, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல பாடகர்களும் அவரது பாடல்களை கேட்டு பாராட்டி வருகிறார்கள். பிரபல இசையமைப்பாளர் பிரவின் மணியுடன் சேர்ந்து பல்வேறு பாடல்களை பாடி வெளியிட்டு வரும் செந்தில் குமரன், தற்போது நவீன் வரிகளில் “கோ...கோ...கோவிந்தா...” என்ற பாடலை வைஷாலி என்னும் பாடகியோடு பாடி தயாரித்து வெளியுட்டுள்ளார்.
மின்னல் மியூசில் YouTube சேனலில் வெளியாகியுள்ள “கோ...கோ...கோவிந்தா...” பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, அப்பாடலை படமாக்கிய விதமும் பலரால் பாராட்டு பெற்று வருகிறது.
மக்களை உற்சாகப்படுத்தும் மற்றும் மகிழ்விக்கும் விதமாக உருவாகியுள்ள இப்பாடல், மிகப்பெரிய பழமையான பாய்மர கப்பலில் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் நடன கலைஞர்கள் என்று பெரிய Team ஐயே  வைத்து செந்தில் குமரன், அப்பாடலை ஒரு பிரமாண்ட திரைப்படத்தின் பாடல் காட்சியைப்போல் படமாக்கிய விதம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.


Song Link: https://youtu.be/LVbHU8GQqOY

 

No comments:

Post a Comment