Featured post

Anali Movie Review

Anali Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anali  படத்தோட review அ தான் பாக்க போறோம். சக்தி வாசு தேவன், சிந்தியா லூர்டே, குமாரவேல், இனியா...

Monday, 27 December 2021

ஸ்ரீதேவி மூவிஸ் வழங்கும் நடிகை சம்ந்தாவின் அடுத்த திரைப்படமான

 ஸ்ரீதேவி மூவிஸ் வழங்கும் நடிகை சம்ந்தாவின் அடுத்த திரைப்படமான ‘யசோதா”  படத்தின் முதல்கட்ட படப்பிடிப்ப்பு நிறைவ்டைந்தது.  



புகழ்பெற்ற ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில், நடிகை  சமந்தா,  ‘யசோதா’ படத்தில் எழுத்தாளாராக முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 


திறமை மிகு இளம் இணைகளான  ஹரி - ஹரிஷ் கூட்டணி இப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர் சிவலெங்கா பிரசாத் படம் குறித்து கூறியதாவது.., 

“தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை எந்த சமரசமின்றி மிகப்பெரியதாக உருவாக்கி வருகிறோம். மேலும் இப்படத்தை கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டப்படப்பிடிப்பு 6ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நடைபெற்றது. சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா ஆகியோர் இந்த முதல்கட்ட படப்பிடிப்பில்,  முக்கியக் காட்சிகளில் நடித்துள்ளனர். இப்படத்தில் ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜனவரி 3 முதல் 12 வரையிலும், இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 20 முதல் மார்ச் 31 வரையிலும் நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர் சுகுமாரின் சிறப்பான ஒளிப்பதிவில்  மிக நம்பிக்கையுடன் படத்தை உருவாக்கி வருகிறார்கள். தொழில்நுட்பம் மற்றும் காட்சிகோர்வையில் ரசிகர்களுக்கு  பிரம்மாண்ட அனுபவத்தை தரும் நோக்கில், எந்த   சமரசமுமின்றி மிகப்பெரிய  பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறோம்”. 


தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்

இயக்குனர்கள்: ஹரி மற்றும் ஹரிஷ்

இசை: மணி சர்மா

ஒளிப்பதிவு: M சுகுமார்

எடிட்டர்: மார்த்தாண்ட் K வெங்கடேஷ்

கலை: அசோக்

சண்டைகள்: வெங்கட்

வசனங்கள்: புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்ய லட்சுமி

பாடல் வரிகள்: ராமஜோகையா சாஸ்திரி

லைன் புரொடியூசர்: வித்யா சிவலெங்கா

கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜாஸ்தி

No comments:

Post a Comment