Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Sunday, 19 December 2021

சில்பகலா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் மது வெள்ளை கடவு தயாரிக்கும்

 சில்பகலா  ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் மது வெள்ளை கடவு தயாரிக்கும் 'புகைப்படம்' படத்தின் பூஜை கேரளாவில் உள்ள  திருவனந்தபுரத்தில் நடைபெற்றது

இப்படத்தில் நாயகனாக மானவ் ஆனந்த் , நாயகியாக கிருபா சேகர் நடிக்க உள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஷிவானி, ராகுல் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.







இப்படத்திற்கு ஒளிப்பதிவு லாரன்ஸ் அந்தோணி, இசை சத்யராஜ், படத்தொகுப்பு பாண்டி, கலை இயக்கம் சாஜி,
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ் முருகன்..

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் கேரளாவில் திருவனந்தபுரத்தில் துவங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது

இப்படத்தைப் பற்றி இயக்குனர் சுரேஷ் முருகன் கூறுகையில், 
சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த கதாநாயகனுக்கு தாய் தந்தையுடன் பேச ஆசை ஏற்பட்டது அதனால் ஆவியுடன் பேசுவதை பற்றிய ஆராய்ச்சி கதாநாயகன் மேற்கொள்கிறார் கதாநாயகியின் தாய் தந்தை திடீரென்று விபத்தில் மரணம் அடைய அவர்களுடைய ஆவியுடன் பேசும்போது பல திடுக்கிடும் உண்மைகள் கிடைக்கிறது.. 

 இதனால்  நாயகனும், நாயகியும் பேராபத்தில் சிக்குகிறார்கள் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குனர்.

No comments:

Post a Comment