Featured post

Filmmaker Bala’s directorial* *Arun Vijay starrer “Vanangaan

 *Filmmaker Bala’s directorial*   *Arun Vijay starrer “Vanangaan’ First Schedule Shoot wrapped up* The makers of Director Bala’s upcoming fi...

Tuesday, 14 December 2021

BLACKHOLE PICTURES PRODUCTIONS சார்பில்,

 BLACKHOLE PICTURES PRODUCTIONS  சார்பில், 

M MANIRATHINAM வழங்கும், AR.ஸ்டீபன் ராஜ் இயக்கத்தில்,

சந்தோஷ் பிரதாப்-மகேந்திரன்-மைக்கேல் தங்கதுரை நடிப்பில், 

புதிய ஹைப்பர்லிங்க் கிரைம்-த்ரில்லர் திரைப்படம் இனிதே துவங்கியது !
















இளம் தலைமுறையினரின்  புது முயற்சிகள்  தமிழ் திரைத்துறைக்கு நனமதிப்பை அளித்து வருகிறது. தமிழ் திரையுலகில் தனது திறமையை படிப்படியாக கூர்மை தீட்டிக்கொண்டிருக்கும் மாஸ்டர் மகேந்திரன், சிறந்த திரைக்கதைகள் மூலம், தன்னை திரைத்துறையில் பதிவு செய்திருக்கும் மைக்கேல் தங்கதுரை, தனது நடிப்பு மற்றும் கடின உழைப்பால்  தனக்கென தனி இடத்தை பெற்றிருக்கும் நடிகர் சந்தோஷ் பிரதாப் மூவரும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கின்றார்கள். ஒரு மிகச்சிறந்த கதையை தேர்வு செய்திருப்பது இப்படத்தை இன்னும் சிறப்பாக்கியுள்ளது.


ஒரு தனித்துவமான கதையை தேர்ந்தெடுக்கும் முயற்சியின் இறுதியில் அவர்கள் ஒரு ஹைபர்லிங் திரைக்கதையில் இணைந்திருக்கிறார்கள். இந்த புதிய தலைமுறையில் ஹைப்பர்லிங்க் வகை அடிப்படையிலான திரைப்படங்களுக்கு, அனைத்து தரப்பினரிடமிருந்தும், பெருமளவில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. இந்த வகையில் புதிய முயற்சியாக BLACKHOLE PICTURES PRODUCTIONS  சார்பில், 

M MANIRATHINAM வழங்க, AR. ஸ்டீபன் ராஜ் இயக்கத்தில், “Production No: 1” இனிதே துவங்கப்பட்டுள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இந்த புதிய ஹைப்பர்லிங்க் கிரைம்-த்ரில்லர் திரைப்படத்தில், சந்தோஷ் பிரதாப்-மகேந்திரன்-மைக்கேல் தங்கதுரை முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.  



தனது குறும்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர்  AR. ஸ்டீபன் ராஜ்,  திரைத்துறையில் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


இப்படத்தில் பங்குபெறும் நடிகர் நடிகையர்கள், மற்றும் தொழில்நுட்ப குழுவினர் கலந்துகொள்ள, இன்று இப்படத்தின் பூஜை எளிமையான சடங்குகளுடன் துவங்கியது. 


BLACKHOLE PICTURES PRODUCTIONS  சார்பில்,  M MANIRATHINAM தயாரிக்கும் இப்படத்தை,AR. ஸ்டீபன் ராஜ் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், மகேந்திரன், மைக்கேல் தங்கதுரை, வைஷ்ணவி (கதாநாயகி), ராஜேஷ், லிவிங்ஸ்டன், சூப்பர் சுப்பராயன், கூல் சுரேஷ் மற்றும் இன்னும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பைக் கையாள்கிறார். சூர்யா (ஸ்டில்ஸ்), சூப்பர் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), சந்திரகாந்த் (மேக்கப்), குமார் S.V. (காஸ்ட்யூமர்), ஜெய்வந்தி (காஸ்ட்யூம் டிசைனர்), மணிவர்மா (கலை இயக்குனர்), அஷ்ரஃப் (எக்ஸிகியூட்டிவ் மேனேஜர்), S குமரேசன் (நிறுவன மேலாளர்), மற்றும் தினேஷ் அசோக் (வடிவமைப்பாளர்) ஆகியோர் மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களாக பணிபுரிகின்றனர்.

No comments:

Post a Comment