Featured post

நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

 *நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு* முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44...

Tuesday 23 October 2018

ஆன்மே கிரியேஷன்ஸ்" மிகுந்த பொருட்செலவில் தமிழ், ஹிந்தி ஆகிய

"ஆன்மே கிரியேஷன்ஸ்" மிகுந்த பொருட்செலவில் தமிழ், ஹிந்தி ஆகிய இருமொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் "மேடி @ மாதவ்" (Maddy @ Madhav)

மாஸ்டர் அஞ்சய் அறிமுக நாயகனாக நடிக்கும் "மேடி @ மாதவ்" விஞ்ஞநான அறிவையும் - தாய்ப்பாசத்தையும் மையக்கருவாக கொண்டு உருவாக்கப்படும் இத்திரைப்படம் நாளைய இந்தியாவை வல்லரசாக மாற்ற உதவும்.

அறிய கண்டுபிடிப்பையும், இளைய சமுதாயத்தின் திறமைகளையும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு முதல் விதையாக இத்திரைப்படம் அமையும்.





இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. "மாதவ்" கதாபாத்திரத்தில் நடிக்கும் "Master Anjay " புலியுடன் நடித்த காட்சிகள் தொடர்ந்து 8 நாட்கள் படமாக்கப்பட்டது இப்படத்தின் சிறப்பம்சமாகும். வீரமும், விவேகமும் மிகுந்த கதாபாத்திரத்தில் "மாதவ்" கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் அஞ்சயுடன், "இளையதிலகம்" பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ரிச்சா பாலோட், வையாபுரி, முத்துகளை, ரியாஸ்கான், பானு பிரகாஷ், ரோஷினி வாலியா, ஆதர்ஷ் அகியோர்களுடன் "இனிது இனிது" படநாயகன் ஆதித் மற்றும் புதுமுகம் நேகாகான் இருவரும் இளம்ஜோடிகளாக இப்படத்தில் நடிக்கின்றனர். 

அறிமுக வில்லன்களாக மும்பை நடிகர்கள் ஜீல்பி சையத், ஷாவெர் அலி ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படம் கோவா - மூனாறு - செர்ராய் கடற்கரை - நிலம்பூர், சாயல்குடி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் 100 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அணைத்து தரப்பினரும் ரசிக்கும் விதமாக மேடி @ மாதவ் திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் கதை - திரைக்கதை எழுதி அனில்குமார் தயாரிக்கிறார். புதுமுக இயக்குனர் பிரதீஷ் தீபு இயக்குகிறார். "போக்கிரி" திரைப்படத்தின் வசனகர்த்தா V. பிரபாகர் இணை திரைக்கதை வசனம் எழுத, அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

எடிட்டிங் - V.T, விஜயன், S.R. கணேஷ் பாபு, 

கலை - தோட்டதரணி 

சண்டைக்காட்சி - அன்பு, அறிவு 

இசை - அவுஸாபச்சன், இஷான் 

பாடல்கள் - நா. முத்துக்குமார், குட்டி ரேவதி 

நடனம் - பிரசன்ன, ரிச்சர்ட் 

மக்கள் தொடர்பு - டைமண்ட் பாபு 

No comments:

Post a Comment