கூத்தன் ராஜ்குமார்க்கு வளரும் ரசிகர் மன்றம்
படம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா..? ; யார் இந்த கூத்தன்..?
போட்டிப்போட்டுகொண்டு கூத்தன் படத்தை விளம்பரப்படுத்தும் தந்தை-மகன்
அதர்வாவுக்கு அடுத்து இந்த சாதனையை செய்திருப்பது ‘கூத்தன்’ ராஜ்குமார் தானாம்..!
இன்று ஒரு அறிமுக ஹீரோ படம் தியேட்டரில் ரிலீஸாவது என்பதே மிக கடினமான விஷயம்.. அப்படியே அந்தப்படம் வந்தாலும், அதற்கு கிடைக்கும் ஓரிரு வார அவகாசத்தில் படத்தின் ஹீரோ ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பது இன்னும் கஷ்டம். ஆனால் வரும் அக்-11ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் கூத்தன் பட நாயகன் ராஜ்குமாருக்கு இந்த மாதிரி சிரமம் எல்லாம் இருக்காது என்றே தோன்றுகிறது...
பின்னே..? தமிழ் சினிமாவில் முதல் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் அது அதர்வாவுக்கு அடுத்தததாக இந்த ராஜ்குமாருக்காகத்தான் இருக்கும். அதர்வாவது பிரபல நடிகரின் வாரிசு.. அவருக்கு ரசிகர்மன்றம் உருவானதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் புதுமுகம் ராஜ்குமாருக்கு என்ன பின்னணி..? கிருஷ்ணகிரி, ஓசூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் எல்லாம் திரும்பிய பக்கமெல்லாம் இவரது புகழ்பாடும் ரசிகர் மன்ற போஸ்டர்கள் தான் நம் கண்களில் படுகின்றன..
காரணம் கூத்தன் பட தயாரிப்பாளரும் ராஜ்குமாரின் தந்தையுமான நீல்கிரீஸ் முருகன் இந்த பகுதிகளில் எல்லாம் செல்வாக்கு பெற்ற மனிதர். அரசியலில் முக்கிய பிரமுகர். அதனாலேயே அவரது மகன் ராஜ்குமாருக்கும் இயல்பாகவே நட்பு வட்டாரம் அதிகம்..
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு செல்வாக்காக தன்னைத்தானே இவர் விளம்பரப்படுத்தி கொள்கிறாரா என்றால் இல்லை என்கிறார்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள். ராஜ்குமாரின் நலம் விரும்பிகள் தான் தங்கள் நண்பனின் முதல் படம் சிறப்பாக வரவேண்டும் என ரசிகர்மன்றம் அமைத்து படத்தை புரமோட் செய்து வருகிறார்களாம். இன்னொரு பக்கம் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவின் தந்தையுமான நீல்கிரீஸ் முருகன் தனது பங்கிற்கு 18 பேருக்கு 18 பவுன் தங்கம் பரிசு என்கிற புதிய விளம்பர யுக்தியை ஏற்கனவே துவங்கிவிட்டார்..
இன்றைய சினிமா வியாபார, விளம்பர உலகில் சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைக்க பலர் போராடும் நிலையில் இந்த ரசிகர் மன்றத்தினர் படத்தை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்து விடுவார்கள் என தாராளமாக நம்பலாம்.
இப்படம் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறது.
No comments:
Post a Comment