Featured post

தமிழக - கேரள எல்லை பகுதியில் கொட்டப்படும் கழிவுகள்.. உண்மைச்

 *தமிழக - கேரள எல்லை பகுதியில் கொட்டப்படும் கழிவுகள்.. உண்மைச் சம்பவத்தை அலசும் “அலங்கு”* *கதையின் மையப்புள்ளியாக மாறும் நாய்... உண்மைச் சம்...

Friday 14 December 2018

ஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா



 ஆரவ்வின் ராஜபீமா படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களின் செய்கைகளால், மக்கள் கவனத்தை ஈர்த்து இடைவிடாது  தலைப்பு செய்திகளிலேயே இருந்தனர் ஆரவ்வும், ஓவியாவும். அவர்களது ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டமான செய்தி வந்திருக்கிறது. ஆரவ்வின் 'ராஜபீமா' படத்தில் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் ஆரவுடன் இணைந்து  நடிக்கிறார் ஓவியா. இந்த சிறப்பு கதாபாத்திரத்தில் ஓவியா நடிப்பதால்  ஒட்டுமொத்த குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் நமக்கு இன்னொரு சந்தோஷம் கலந்த ஆச்சர்யத்தையும் அளிக்கிறார்கள். ஓவியா படத்தில் நடிப்பதோடு, ஒரு குத்துப்பாட்டுக்கு ஆரவ்வுடன் ஜோடியாக நடனம் ஆடுகிறார். கடந்த இரண்டு நாட்களாக பொள்ளாச்சியின் அழகிய பகுதிகளில் இந்த பாடல் வெற்றிகரமாக படம் பிடிக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதம் ஓவியா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மேலும் அவர் திரையில் தோன்றும் நேரம் (ஸ்கிரீன் டைம்) படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.

'ராஜாபீமா' மனிதன் -  மிருக  முரண்பாடுகளை சுற்றி உருவாகும் ஒரு திரைப்படம். நரேஷ் சம்பத் இயக்கும் இந்த படத்தை எஸ்.மோகன் தயாரிக்கிறார். பாலக்காடு, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அழகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. மிக வேகமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரை நகர்ப்புற (Semi urban) பின்னணியில் படமாக்கப்படும் முதல்  மனிதன், விலங்கு சார்ந்த திரைப்படம் என்பது ராஜாபீமாவின் இன்னுமொரு முக்கியமான சிறப்பம்சம்.


No comments:

Post a Comment