Featured post

வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது

 *வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது.* .. மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள...

Thursday, 6 December 2018

எனக்கு பன்றி காய்ச்சல் இல்லை

  
    எனக்கு பன்றி காய்ச்சல் இல்லை சாதாரண காய்ச்சல் தான்
                                       குணமாகி விட்டேன்
                                            நடிகர் சரவணன்


வைதேகி வந்தாச்சு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணன்...
அதற்கு பிறகு பார்வதி என்னை பாரடி பொண்டாட்டி ராஜ்யம் அபிராமி சூரியன் சந்திரன் சந்தோஷம் உட்பட ஏராளமான படங்களில் அதாவது 25 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர்.                                                                       இவர். பருத்தி வீரன் படத்தில் சித்தப்பூ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பருத்தி வீரன் சரவணன் என்று மிகப் பிரபலமானார்.

சமீபத்தில் அவருக்கு பன்றி காய்ச்சல் என்று பரவலாக பேசப்பட்டது...

நான் சேலத்தில் இருந்த போது காய்ச்சல் இருந்தது...அங்கு சிகிச்சை எடுத்து விட்டு சென்னை வந்த போதும் காய்ச்சல் குணமாகாததால் இங்கு தனியார் மருத்துவ மனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்...
மூன்று நாட்கள் கழித்து அது சாதாரண காய்ச்சல் தான் என்று சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்...

வீட்டுக்கு வந்த பின் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் ஒரு படத்தில் நடித்தும் விட்டேன்..இன்னமும் பல பேர் எனக்கு பன்றி காய்ச்சல்   இருக்கிறது...என்று போன் செய்து நலன் விசாரிக்கிறார்கள்.அப்படி ஒன்றும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் சரவணன் கூறி இருக்கிறார்.

No comments:

Post a Comment