Featured post

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event

 *Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !* Vishnu Vishal’s “Aaryan” Gears Up for Release on October 31 with a Sp...

Tuesday, 2 April 2019

திருநங்கைகள் வசிக்க இடம் வாங்கி கொடுத்தார் லாரன்ஸ்

பிறப்பிலேயே வினோதமான பிறப்பு  திருநங்கை பிறப்பு...அப்படிப் பட்டவர்கள் எல்லா இடங்களிலும் ஒதுக்கப் பட்டு தனிமைப் படுத்தப்  பட்டு விடுகிறார்கள் ..அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார் லாரன்ஸ் ..

ஆதரவற்ற திருநங்கைகளுக்காக வீடு கட்டித் தர நடிகர் ராகவா லாரன்ஸ் மீஞ்சூரில்  1.25 கிரவுண்ட் நிலத்தை வழங்கியுள்ளார..

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த ஜாலியான பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது.

அதன் வரிசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை தவிர்க்குமாறு  சன் டிவி-யிடம் கேட்டுக் கொண்ட ராகவா லாரன்ஸ், இசை வெளியீட்டிற்கு செலவாகும் தொகையை ஆதரவற்ற திருநங்கைகளுக்கு உதவ ஏற்பாடு செய்துள்ளார்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கைகள் வசிக்கும் வகையில் வீடுகள் கட்டித் தர ராகவா லாரன்ஸ் எடுத்துள்ள இம்முயற்சிக்கு, மக்களும் உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  திருநங்கைகளின் ஆசிர்வாதத்தை மிகப் பெரிய வரமாக நினைப்பவர்கள் நாம்...
அதனால் அவர்கள் ஆசிர்வாதம் வேண்டுபவர்கள் தங்களால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்து அவர்கள் தங்கி வாழ வழி செய்தால் புண்ணியம் கிடைக்கும்...இவ்வாறு ராகவா லாரன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்..

‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்.19ம் தேதி ரிலீசாகவுள்ளது.

No comments:

Post a Comment